விநாயகர் சதுர்த்தி: விநாயகருக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்கின்ற பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும். அதுமட்டுமில்லாமல் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக்கூடிய அருளை விநாயகப் பெருமான் வழங்குகிறார்.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு எந்த பொருட்களைக் கொண்டு சமர்ப்பித்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
மஞ்சள் வைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு சகல பாக்கியமும் கிடைக்கிறது.

குங்குமம் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குகிறார்கள்.
சந்தனம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
விபூதி படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது உஷ்ண நோய்கள் யாவும் விலகுகிறது.
உப்பு சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது எதிரிகள் தொல்லை யாவும் விலகும்.
பழங்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது.
பூக்கள் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது நினைத்த காரியம் நிறைவேறுகிறது.

தங்கம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது செல்வ செழிப்பு உண்டாகிறது.
வெள்ளி சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது மன அமைதி கிடைக்கிறது.
வாழைப்பழம் சமர்ப்பித்து வழிபாடு செய்கின்ற பொழுது வம்ச விருத்தி உண்டாகும்.
அருகம்புல் படைத்து வழிபாடு செய்கின்ற பொழுது ஆன்மீகத்தில் வெற்றியும் விநாயகப் பெருமானின் பரிபூரண அருளும் நமக்கு கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |