நீங்கள் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபரா? இந்த பதிவு உங்களுக்கு தான்?

By Sakthi Raj Jul 26, 2026 02:30 PM GMT
Report

முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது என்பது நமக்கு ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் மனரீதியாகவும் நமக்கு மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறது.

பொதுவாக, நீங்கள் ஒரு நாள் ஒரு மிகப்பெரிய அளவில் மனரீதியாக அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். அன்றைய நாள் நீங்கள் மனதை குழப்பிக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்து முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி கவசத்தை மனதார பாராயணம் செய்து வாருங்கள்.

நீங்கள் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபரா? இந்த பதிவு உங்களுக்கு தான்? | Benefits Of Chanting Kantha Sashti Kavasam Daily

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?

12 ராசிகளும் செல்வம் ஈர்க்க வைக்க வேண்டிய அதிர்ஷ்ட படங்கள் என்ன?

உங்களுக்கு உடனடியாக அந்த கவலைகள் காணாமல் போவதை நீங்கள் பார்க்கலாம் சஷ்டி கவசத்தை நாம் படிக்கும் பொழுது நம்முடைய உடலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த மாற்றமானது நம்முடைய மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கும் நமக்கு உடனடியான வலிமை கொடுப்பதற்கும் அவை சக்தியாக அமைகிறது.

அப்படியாக, ஒருவர் கந்த சஷ்டி கவசத்தை தினமும் பாராயணம் செய்கிறார் என்றால் அவர்களுக்கு வீடுகளில் பீடை, தரித்திரம் செய்வினை இவையெல்லாம் அடியோடு விலகுகிறது. அதேபோல், வீடுகளில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருப்பதோடு குழந்தை பாக்கியம் கிடைத்து மன நிம்மதி அடைகிறது.

நீங்கள் தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் நபரா? இந்த பதிவு உங்களுக்கு தான்? | Benefits Of Chanting Kantha Sashti Kavasam Daily

2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?

2026: கேது பார்வையால் அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 முக்கிய ராசிகள் யார்?

கந்த சஷ்டி கவசம் ஒருவர் படிக்கிறார் என்றால் அந்த நபருக்கு புகழ் மதிப்பு மற்றும் முக வசீகரம் அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை மூன்று முறை ஒருவர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யும் பொழுது நினைத்த காரியம் நடைபெறுகிறது. குடும்பத்தில் தம்பதியினர் இடையே ஒற்றுமை பெறுகிறது.

அதிலும் குறிப்பாக சஷ்டி தினத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து ஆலயம் சென்று முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நடக்கவே நடக்காது, முடியவே முடியாது என்கின்ற காரியம் ஒரு நல்ல முடிவை நொடிப் பொழுதில் பெறுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US