கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் பணம் வருமா ?
கலியுக வரதனாக போற்றப்படும் முருகப் பெருமான் பக்தர்களின் துயர் தீர்த்து அவர்களை காக்கும் கடவுளாக இருக்கிறார். அப்படியாக முருகப்பெருமானுடைய மந்திரங்கள் பல இருந்தாலும் அவருடைய கந்த சஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களிடையே காணப்படுகிறது.
காரணம் வாழ்க்கையில் நமக்கு என்ன பிரச்சனைகள் இருந்தாலும் ஒருவர் முருகப்பெருமானை மனம் உருகி வேண்டி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற துன்பங்கள் விலகும் என்பது பக்தர்கள் அவர்கள் அனுபவ ரீதியாக சொல்லக்கூடிய ஒரு உண்மை ஆகும்.
மேலும் கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு எதிரிகள் தொல்லைகளே இருப்பதில்லை. எவ்வளவு பெரிய எதிரிகள் உங்களை துன்பறுத்தினாலும் நாம் முருகனை சரண் அடைந்து கந்த சஷ்டி கவசம் படிக்க முருகப்பெருமான் கட்டாயம் நம்மை காப்பர்.
அப்படியாக கந்த சஷ்டி கவசம் படிப்பதனால் நம் வாழ்க்கையில் என்னென்ன அதிசயங்கள் நடக்கிறது என்று பல்வேறு முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடரும் முருக பக்தருமான வித்யா கார்த்தி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |