ராகு கேதுவை வழிபாடு செய்யும் பொழுது மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது பகவான் நிழல் கிரகமாக இருந்தாலும் இவர்களுடைய தாக்கம் நமக்கு அதிக அளவு நம்முடைய ஜாதகத்தில் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது ராகு அமர்ந்திருக்கக்கூடிய இடமும் கேது அமர்ந்திருக்கக்கூடிய இடமும் தான் ஜாதகருடைய வாழ்க்கையை தீர்மானிக்க கூடியதாக இருக்கிறது.
அதாவது ராகு கேது எந்த கிரகங்களோடு சேர்க்கை பெறுகிறதோ அந்த கிரகங்கள் ராகு கேதுவின் அம்சத்தை பெற்று நமக்கு பலவிதமான நன்மை தீமைகளை வழங்குகிறார்கள். அப்படியாக நாம் கட்டாயமாக கோயிலுக்கு சென்றால் நவகிரக வழிபாடுகளை செய்ய வேண்டும்.
மேலும் ஜோதிடத்தில் எல்லா கிரகங்களும் முன்னோக்கி செல்கிறது என்றால் ராகு கேது மட்டும் பின்னோக்கி செல்லக்கூடியதாக இருக்கிறது. அதனால் பலரும் நவகிரகங்களில் ராகு கேது பகவானை வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் பின்னோக்கி சுற்றி வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று சில கருத்துக்கள் இருக்கிறது.

ஆனால் உண்மையில் நாம் ராகு கேது பகவானை வழிபாடு செய்யும்பொழுது எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். நாம் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்றாலும் சாஸ்திர ரீதியாக கடவுள்களை நம் முறையாக முன்னோக்கி சென்று அதாவது இடமிருந்து வலமாக வலம் தான் வழிபாடு செய்ய வேண்டும்.
இதுதான் நம் கடவுள்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் செய்யக் கூடிய ஒரு மரியாதையும் ஆகும். இவ்வாறு செய்யும் பொழுது தான் நமக்கு நவகிரகங்களுடைய ஆசிர்வாதம் கிடைக்கிறது.
அதனால் ராகு கேதுவை வழிபாடு செய்யும்பொழுது எவ்வாறு பிற தெய்வங்களை நாம் வலம் வந்து வழிபாடு செய்வோமோ அவ்வாறு வழிபாடு செய்வதனால் நமக்கு வாழ்க்கையில் நிம்மதியும் ஆன்மீக ரீதியாக நல்ல வளர்ச்சியில் கிடைக்கும்.
அதை தவிர்த்து பிறர் சொல்லும் சில விஷயங்களைக் கேட்டு பின்னோக்கி அதாவது வலமிருந்து இடமாக வலம் வருதல் வந்து வழிபாடு செய்யும் பொழுது அவை சாஸ்திரத்திற்கு எதிராக செய்யக்கூடிய விஷயமாக அமைந்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |