ஞானமும் செல்வமும் அருளும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமங்கள்
அம்பிகையின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாக ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் இருக்கிறது. ஒருவர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் படிப்பதால் அவர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற நன்மைகள் நடக்கிறது. அப்படியாக, ஒருவர் ஏன் லலிதா ஸஹஸ்ரநாமம் படிக்கவேண்டும்? அதை படிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் இதை உபதேசித்தவர் ஹயக்ரீவர் ஆவார். உபதேசம் பெற்றவர் அகஸ்திய முனிவர் ஆவார். அதாவது இந்த ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்உபதேசம் செய்தவரும், உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
அதாவது ஒருமுறை பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டுஎடுத்தார்.
மேலும், ஞானத்தின் வடிவமாக போற்றப்படுகிறார் ஹயக்ரீவர். குழந்தைகள் ஹயக்ரீவரை பற்றி கொள்ள அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று ஐதீகம். ஆக, சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது.
அதோடு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் மிகவும் கவித்துவம் கொண்டும், மிகுந்த அழகோடும் திகழ்கிறது. இந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாள் லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருளாக இருப்பதை உணர்த்துகிறது. இவர்களுக்கு மேல் ஒரு தெய்வம் எதுவும் இல்லை என்று உணர்த்துகிறது.
“துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே”என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள் ஆகும். எவர் ஒருவர் லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு அம்பிகையின் அருள் கிடைப்பதோடு, அவர்கள் ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வும், ஞானமும் கொண்டு விளங்குகிறார்கள்.
மேலும், படிப்பிற்கு அதிபதியாக வணங்கப்படும் சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்குபவர் ஹயக்ரீவர். அவரை அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்கள் ரகசியங்களுள் ரகசியமானது. இந்த துதிக்கு இணையான துதி எதுவும் இல்லை. இந்த துதிகளை போக்குபவருக்கு நோய்கள் இல்லாமல் நல்ல உடல் நிலையோடு வாழ்வார்கள். அதோடு குடும்பத்தில் உண்டான வறுமை விலகி அவர்கள் குடும்பத்தில் செல்வம் பெருகும்.
அம்பிகையின் நாமத்தை படிப்பவர்களுக்கு அகால மரணம் நெருங்குவதில்லை. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம் செய்யுதல் ஆகும் என்கிறார்.
அம்பிகையின் நாமத்தை படிப்பவரக்ளுக்கு எதிரிகளால் தொல்லையே இருக்காது. எப்பேர்ப்பட்ட வலிமை மிகுந்தவனும் அம்பிகையை எதிர்க்க அவன் வீழ்ந்து போவான் என்கிறார்கள்.
அது மட்டும் அல்லாமல், லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்பவர்கள் பார்வை பட்டாலே பிறர் தோஷம் விலகிவிடும். லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |