யாரெல்லாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது? முழு விவரங்கள் இதோ

By Sakthi Raj Apr 12, 2026 05:47 AM GMT
Report

நம்முடைய இந்து மத வழிபாடுகளில் எலுமிச்சை பழம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவை அம்மான் மற்றும் கால பைரவர் வழிபாடுகளில் முக்கிய இடம்பெற்று வருவதை நாம் காணலாம். மேலும் எலுமிச்சை பழத்தை நாம் தெய்வீக கனி என்று தான் அழைக்கிறார்கள்.

பிற பழங்களில் உள்ளே பூச்சி அரித்து அவற்றின் தன்மை மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எலுமிச்சை பழம் அவ்வாறு கிடையாது காய்ந்து போனாலும் அழகி போனாலும் அதனுடைய தன்மை எப்போதும் மாறாத நிலையை பெற்றிருக்கிறது. முக்கியமாக எலுமிச்சை பழத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை அவ்வாறே ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு.

ஆதலால் அதை நாம் எப்பொழுதும் நேர்மறை ஆற்றலை இருப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனால் தான் கோவில்களில் தெய்வங்களுடைய அருளையும் தெய்வீக தன்மையையும் பெறுவதற்கு நாம் வழிபாடுகளில் எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி வருகிறோம்.

அப்படியாக, எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்த கிழமைகளில் நாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது என்று பார்ப்போம்.

யாரெல்லாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது? முழு விவரங்கள் இதோ | Benefits Of Lighting Lemon Diya On Temple

இன்றைய ராசி பலன் (12-04-2026)

இன்றைய ராசி பலன் (12-04-2026)

தீபம் ஏற்ற உகந்த நாள்:

பொதுவாக, எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவதற்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை உள்ளது. அதிலும் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது மிகவும் சிறந்த பலன்களை கொடுக்கும். இந்த ராகு காலங்களில் எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகளை நீங்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதில் இருக்கக்கூடிய சாரை பிழிந்து பிறகு தோலை உட்புறமாக திருப்பி அதை ஒரு கிண்ணம் வடிவில் எடுத்துக்கொண்டு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த விளக்கை துர்க்கை அம்மனுக்கு நேராக ஏற்றி அம்மனுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்வது என்பது நல்ல பலன்களை கொடுக்கும். இவ்வாறு எலுமிச்சை பல தீபம் ஏற்றிய பிறகு 9 முதல் 21 முறை அம்மனை வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

குறிப்பாக எலுமிச்சை பழ விளக்கை நாம் எப்பொழுதுமே ஜோடியாக தான் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒற்றை தீபம் மட்டும் ஏற்றக்கூடாது. அதை போல் எலுமிச்சை பழ தீபத்தை நாம் கட்டாயமாக கோவில்களில் மட்டுமே ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். வீடுகளில் தவறியும் ஏற்றக்கூடாது.

யாரெல்லாம் எலுமிச்சை பழ தீபம் ஏற்றலாம்? ஏற்றக்கூடாது? முழு விவரங்கள் இதோ | Benefits Of Lighting Lemon Diya On Temple

நீங்கள் துலாம் ராசியில் பிறந்த ஆணா?? உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் துலாம் ராசியில் பிறந்த ஆணா?? உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்

தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. வாழ்க்கையில் கடினமான துன்ப காலத்தை சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் கட்டாயமாக எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வது என்பது அவர்களுக்கு ஒரு நல்ல பலன் அளிக்கும்.

அதிலும் குறிப்பாக தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் மாலை 4:30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ஏற்றி வழிபாடு செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

2.கணவன் மனைவி இடையே தீராத பிரச்சனையும் தகராறுகளும் சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4. 30 மணி வரை காலத்தில் எலுமிச்சை பழ விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

3. அதைப் போல் சொத்து பிரச்சனையை சந்திப்பவர்கள் குடும்பத்தில் பிள்ளைகளுக்கு திருமண தாமதத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் வேலை கிடப்பதில் பிரச்சனை போன்றவர்கள் வெள்ளிக்கிழமையன்று ராகு காலத்தில் அவர்கள் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

4. செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது ஒருவருக்கு ராகு தோஷம், செவ்வாய் தோஷம், கடன் பிரச்சனை கோர்ட் வழக்குகள் எல்லாம் தீரும்.

5. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை பைரவர் வழிபாட்டிற்கு உரியது என்பதால் அன்றைய தினத்தில் பைரவர் சன்னதியில் எலுமிச்சை பழ தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட எதிரிகளாக இருந்தாலும் அவர்கள் உங்களை விட்டு விலகி விடுவார்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US