Today Pooja Time : ஞாயிற்றுக்கிழமை ராகுகால பூஜை செய்வதால் இந்த பிரச்சினைகள் தீரும்
இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் ஞாயிற்றுக்கிழமை கிரகங்களின் அதிபதியான சூரிய பகவானுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.
எனவே ஞாயிற்றுக்கிழமை நாளில் சூரிய பகவானுக்கு விரதம் இருப்பதால் வாழ்வில் இருந்து வந்த அனைத்த துன்பங்களும் நீங்கி சுவிட்சம் கிட்டுவதுடன் சூரிய தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.
2024 செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை மற்றும் மாலை நேரங்களில் நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பது குறித்தும் ஞாயிறுக்கிழமைகளின் எந்த தெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும் என்பது தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய பூஜை நேரம்
ஞாயிற்று தினத்தில் சூரிய பகவானை சிறப்பு பூஜை செய்து வழிப்படுவது சூரிய தோஷத்தில் இருந்து விமோர்சனம் பெற துணைப்புரியும். இந்த தினத்தில் சூரியனை மகிழ்விப்பதால் வாழ்வில் உயர்வு கிடைக்கும், வெற்றிக்கான பாதைகள் திறப்பதுடன் நீண்ட நாட்கள் அனுபவித்துவந்த துன்பங்கள் நீங்கும் என நம்பப்படுகின்றது.
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி மாதம்
தேதி: 23
கிழமை : ஞாயிறு
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி
நேரம் : பிற்பகல் 5 மணி 15 நிமிடம் வரை பின்பு : சஷ்டி
நட்சத்திரம் : இன்று சுவாதி பிற்பகல் 1 மணி 58 நிமிடம் வரை பின்பு விசாகம்
சூரிய உதயம் காலை : 6 மணி 04 நிமிடம்
நல்ல நேரம் காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை
மாலை : 3 மணி 15 நிமிடம் முதல் 4 மணி 15 நிமிடம் வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம் ராகுகாலம் : மாலை 4 மணி 30 நிமிடம் முதல் 6 மணி வரை
குளிகை : பிற்பகல் 3 மணி முதல் 4 மணி 30 நிமிடம் வரை
எமகண்டம் : பிற்பகல்12 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரை
இன்றைய தினத்தின் சிறப்பு
மகாலட்சுமி விரதம்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு வழிபாடு
வாழ்வில் வெற்றியடை வேண்டும் தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்கள் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பூஜைகளை செய்வது சாதக பலன்களை கொடுக்கும்.
ஞாயிற்றுக்கிழமை சிவபெருமான் மற்றும் மகா விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமான நாளாக பார்க்கப்படுகின்றது. இன்றை தினத்தில் சூரிய பகவானை வழிப்படுவது பெரியவர்களுக்கு மட்டுமன்றி குழந்தைகளுக்கும் சிறப்பான பலன்களை கொடுக்கின்றது.
சூரிய பகவான் கல்வி மற்றும் தலைமைத்துவத்து பண்புகளை கொடுக்கும் கிரகமாக இருப்பதால் சிறுவர்களும் இந்த தினத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு மிக்கது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசு, எறும்பு, புறா, நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவு கொடுப்பதும் சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை உங்களுக்கு முழுமையாக கொடுக்கும்.
இன்று ராகு காலத்தில் கால பைரவர், காளி, சர்வேஷ்வரர் போன்ற தெய்வங்களை வழிபடுவது சிறப்பு மிக்கது. குறித்த நேரத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவதும் மிகவும் விசேடமாக பார்க்கப்படுகின்றது.