இந்த முறையில் வீடுகளில் தூபம் போட்டால் தீய சக்திகள் விலகிவிடும்
பொதுவாகவே சாம்பிராணி என்றால் நமக்கு ஒரு நல்ல நறுமணம் கொடுக்க கூடியது என்று தான் நினைவிற்கு வரும். ஆனால் சாம்பிராணி ஆன்மீக ரீதியாக நமக்கு பல நன்மைகளை செய்கிறது. நம்முடைய வீடுகளில் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
அதனால் தான் முன்னோர்கள் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் தவறாமல் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அப்படியாக தசாங்கம் என்றால் என்ன? அந்த முறையில் சாம்பிராணி தூபம் எப்படி போடுவது எப்படி? தசாங்கம் தூபம் போடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் என்னவென்று பார்ப்போம்.

தசாங்கம் என்பது ஒரு வகை சாம்பிராணி தான். ஆனால் இது சாதாரணமாக நாம் போடக்கூடிய சாம்பிராணி தூபம் அல்ல. சித்த மூலிகை கலவையால் உருவான ஒரு தெய்வீகப் பொருளாகும். அதாவது தசம் என்றால் பத்து என்று பொருள்.
பத்து வகையான புனிதமும் நறுமணமும் கொண்ட மூலிகைகள் இதில் சேர்க்கப்பட்டதால் இதற்கு இந்த பெயர் வந்தது. தூபம், அபிஷேகம், மனசுத்தி சூழல் சுத்தி இவற்றுக்காக குறிப்பிட்ட பாரம்பரிய மூலிகை கலவையை இந்த தசாங்கம் ஆகும். இந்த மூலிகைகளில் இருக்கக்கூடிய நறுமணமானது நம்முடைய மனதை அமைதிப்படுத்துவதோடு தெய்வீக சிந்தனையை தூண்டி ஒரு நல்ல நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது.
மேலும் இந்த தசாங்கத்தில் வெட்டிவேர், லவங்கம் வெள்ளை குங்கிலியம், ஜாதிக்காய், மட்டிப்பால், சந்தனத்தூள், நாட்டுச் சர்க்கரை, திருவட்ட பச்சை, சாம்பிராணி, கீச்சிலி கிழங்கு என்று பத்து வகையான பொருட்களை சேர்த்து இருப்பார்கள்.

தசாங்கம் தூபம் போடுவதால் கிடைக்கும் பலன்கள்:
வீடுகளில் தசாங்கம் தூபம் போடுவதால் வீடுகளில் மன அழுத்தத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு நல்ல விடுதலை கிடைக்கும். அதைவிட முக்கியமாக வீடுகள் எப்பொழுதும் நல்ல நறுமணமாக காணப்படும்.
வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் தீய சக்திகள் போன்றவை விலகும். குறிப்பாக கண்திருஷ்டி போன்ற பாதிப்புகள் இருந்தாலும் அவையும் விலகிவிடும். ஒரு புத்துணர்ச்சியாக நம் வீட்டில் இருக்கக்கூடிய நபர்களை வைத்திருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக சிக்கல்கள் இருந்தால் அதை நமக்கு சரி செய்து கொடுக்கும். மேலும் சாம்பிராணி துவம் போட்டு முடித்த பிறகு அந்த சாம்பலை செடி, கொடிகளுக்கு நாம் போட்டுவிடலாம். இது நல்ல ஆற்றலை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |