வரலட்சுமி விரதம்: தெரிந்துகொள்ள வேண்டிய 21 முக்கியமான தகவல்கள்
விரதங்களில் மிக முக்கியமான விரதமாக வரலட்சுமி விரதம் இருக்கின்றது. எவர் ஒருவர் முறையாக வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மஹாலட்சுமி தேவியின் பரிபூர்ண அருள் கிடைக்கின்றது.
மேலும், இந்த விரதம் இருப்பதால் பல்வேறு சிறப்புகள் கிடைக்கின்றது. அப்படியாக, நாம் வரலட்சுமி விரதம் ஏன் இருக்க வேண்டும் என்று சில முக்கியமான தகவல்களை பற்றி பார்ப்போம்.
1. வீடுகளில் லட்சுமி பூஜை செய்வது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையச்செய்கிறது.
2. எவர் ஒருவர் வீடுகளில் லட்சுமி பூஜை செய்கின்றார்களோ அவர்கள் வீட்டில் மஹாலட்சுமி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.
3. நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் பெறவும், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழவும் இந்த விரதம் இருப்பது கைக்கொடுக்கும்.
4. வரலட்சுமி விரதம் இருந்து பூஜை செய்தால் திருமண தோஷம் விலகும்.
5. பெண்களுக்கு தங்கள் குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கல்களும் வராமல் மகிழ்ச்சியோடு வாழ வரலட்சுமி விரதம் இருப்பது நல்ல பலன் கொடுக்கும்.
6. மஹாலட்சுமி தேவிக்கு மிக உகந்த நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை வரலட்சுமி விரத தினத்தில் மறத்தல் கூடாது.
7. பூஜை வேளையில் கட்டாயம் மஹாலட்சுமியின் மந்திரங்களும் பாடல்களும் பாடி வழிபாடு செய்ய வேண்டும்.
8. பத்ம புராணத்தில் மஹாலட்சுமி விரதம் இருந்தவர்கள் மிக பெரிய பயனை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
9. வீடுகளில் எப்பொழுதும் மஹாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபாராதனை செய்ய வேண்டும். அதோடு, வீடுகளில் கட்டாயம் உப்பு தீர்ந்து போகும் அளவிற்கு விடக்கூடாது.
10. நம்முடைய மனதில் நல்ல சிந்தனை கொள்ள வேண்டும். அப்பொழுது தான் துன்பத்திலும் அவள் கைவிடாமல் நமக்கு ஆசி வழங்குவாள்.
11. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்கின்றது.
12. வரலட்சுமி நாளில் கவசம் வைத்து வழிபாடு செய்பவர்கள் மஹாலட்சுமிக்கு பிடித்த நிறமான மஞ்சள் நிற பட்டு சாற்றி வழிபாடு செய்வது சிறப்பு.
13. வரலட்சுமி விரதம் இருப்பவர்களுக்கு உலகத்தில் உள்ள அனைத்து செல்வங்களும் கிடைக்கின்றது.
14. அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வழிபாடு செய்வது குடும்பத்தின் நலனை மேம்படுத்தும்.
15. வரலட்சுமி பூஜை அன்று கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்வது சிறந்தது.
16. வீடுகளில் வரலட்சுமி பூஜையின் பொழுது பயன்படுத்தும் கும்பத்தை பூஜை முடிந்து சுத்தமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை நாம் வேறு சில பூஜைகளுக்கு பயன் படுத்தலாம்.
17. எதிர்பாராத விதமாக வரலட்சுமி பூஜையில் வைக்கும் கும்பம் நெளிந்து விட்டால் அல்லது சேதம் அடைந்தால் அதை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.
18. வரலட்சுமி நாளில் புனித நீர்களில் நீராடினால் இரண்டு வருடம் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
19. வரலட்சுமி பூஜை தினத்தன்று 3 முறை கோயில்களுக்கு சென்று அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
20. மஹாலட்சுமி தாயாருக்கு பிடித்த தாமரை மலர்களை வைத்து வாழிபாடு செய்வது புண்ணியத்தை தேடிக் கொடுக்கும்.
21. வரலட்சுமி விரத நாளில் வீட்டிற்கு பூஜைக்காக வருபவர்களுக்கு நம்மால் முடிந்த தாம்பூலம் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







