நாமக்கல் ஆஞ்சநேயர் மாலையில் பற்றிய தீ- தேம்பி அழுத பக்தர்கள்

By Sakthi Raj Aug 08, 2025 06:55 AM GMT
Report

இராமாயணத்தில் ஸ்ரீ  ராமரின் பலமாக இருந்தவர் ஆஞ்சநேயர். இவர் வீரத்திலும் அறிவிலும் சிறந்து விளங்கக்கூடியவர். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கு எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார் என்பது ஐதீகம். அப்படியாக, இவருக்கு தமிழகத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்கள் இருந்தாலும் நாமக்கல் மையப்பகுதியில் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இங்கு சுமார் 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இக்கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து வருகின்றார்கள்.

மேலும், தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலும் ஒன்று. இந்நிலையில் நேற்று ஆஞ்சநேயருக்கு நண்பகலில் வெட்டி வேர் மாலை சாத்தப்பட்டு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டது.

நாமக்கல் ஆஞ்சநேயர் மாலையில் பற்றிய தீ- தேம்பி அழுத பக்தர்கள் | Namakal Anjaneyar Temple News In Tamil

அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில் தீபாராதனை தட்டில் இருந்த நெருப்பு திடீர் என்று ஆஞ்சிநேயரின் வெட்டிவேர் மாலையில் வேகமாக பற்றியது. அந்த சம்பவத்தை பார்த்த உடன் அங்கிருந்த பட்டாச்சாரியார்கள் தண்ணீரை கொண்டு மாலையில் பிடித்த தீயை அணைத்தனர். அதோடு சுவாமிக்கு திரைப் போட்டனர்.

இவ்வாறு சில தவறுகளால் ஏதெனும் சம்பவங்கள் நடந்தால் ஆகம விதிப்படி உடனே சில விஷயங்கள் பின்பற்ற வேண்டும். அதனால் உடனே நேற்று கோவிலை தூய்மைப்படுத்தி, சிறப்பு பூஜைகள் நடத்தி, மீண்டும் பால் மற்றும் தயிர் போன்ற பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தார்கள்.

பெண்கள் இன்று வீடுகளில் வரலட்சுமி பூஜை செய்யமுடியாதவர்கள் என்ன செய்யலாம்?

பெண்கள் இன்று வீடுகளில் வரலட்சுமி பூஜை செய்யமுடியாதவர்கள் என்ன செய்யலாம்?

அந்த பூஜைகள் முடிந்த பின்பு தான் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு ஆஞ்சநேயரின் மாலையில் பற்றிய தீயை பார்த்த பக்தர் அன்பின் காரணமாக தேம்பி அழுத்த காட்சி அனைவரையும் கலங்க வைத்ததது.

மேலும் இந்த செய்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவியதால் பெண்களும் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி வழிபாடு மேற்கொண்டு இருக்கிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US