வீடுகளில் வரலட்சுமி பூஜை செய்யமுடியாதவர்கள் என்ன செய்யலாம்?
இந்து மதத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய விசேஷங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இந்த விரதமானது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
மேலும், இந்த விரதத்தை பெண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் சக்தி வாய்ந்த விரதம் ஆகும். இந்த நாளில் வீடுகளில் மாக்கோலமிட்டு, மாவிலை தோரணைகள் கட்டி கைகளில் நோன்புக்கயிறு கட்டி விரதம் இருந்து மஹாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வார்கள்.
எவர் ஒருவர் இந்த விரதம் இருந்து மஹாலட்சுமி தாயாரை வழிபாடு செய்கின்றார்களோ அவர்களின் குடும்பத்தில் நிறைவான மகிழ்ச்சியும், குறையாத செல்வமும் சேரும் என்பது நம்பிக்கை. அப்படியாக, இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் பௌர்ணமி அம்சத்தோடு சேர்த்து இன்று (08-08-2025) கொண்டாடப்படுகிறது.
ஒரு சில பெண்களால் மாதவிடாய் காரணத்தினாலும் அல்லது வேறு சில முக்கிய காரணமாக வரலட்சுமி விரதத்தை இன்று வழிபாடு செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் அதற்காக மனம் வருத்தம் கொள்ள தேவை இல்லை.
அவர்கள் கட்டாயம் அடுத்த வாரத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமையில் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி தாராளமாக அவர்களுடைய வழிபாட்டை நிறைவேற்றலாம்.
இன்றைய நாள் எவ்வாறு முறைப்படி பூஜை செய்து வழிபாடு செய்வார்களோ அதை அவர்கள் அப்படியே அடுத்த வாரத்தில் நோன்புக்கயிறு கட்டி விரதம் இருந்து வழிபாடு செய்து மஹாலட்சுமி தாயாரின் முழு அருளைப் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







