மகா சிவராத்திரி: இன்று இரவு 11 மணி முதல் 2 மணி வரை இதை செய்ய தவறாதீர்கள்
ஒருமுறை பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்குள் யார் பெரியவர் என்று போட்டி நடந்தது. அப்பொழுது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கக்கூடிய சிவபெருமான் "ஈசன் ஒருவனே பெரியவன்" என்பதை உணர்த்துகின்ற வகையில் ஜோதி பிளம்பாய், லிங்கோத்பவ ரூபமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே எழுந்து நின்றார் என்று புராணங்கள் சொல்லுகிறது. இந்த தெய்வீக நிகழ்வு நடைபெற்ற நாள் சிவராத்திரி.
மேலும் ஒருமுறை காட்டில் புலிக்கு பயந்து வில்வ மரத்தின் மீது எறிய குரங்கு, இரவு முழுவதும் அங்கேயே தங்கி, தூங்கிவிட்டால் எங்கே நம் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் வில்வ இலைகளை ஒன்றின் பின் ஒன்றாக பறித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தது.
அந்த இலைகள் கீழே சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்வது போல் விழுந்தது. அன்று இரவு தான் சிவராத்திரி என்பதால் காலையிலிருந்து விரதம் இருந்து இரவில் தூங்காமல் கண் விழித்து வில்வத்தால் சிவ பெருமானை அர்ச்சனை செய்த பலன் அந்த குரங்கிற்கு கிடைத்தது.

பின்னர் அந்த குரங்கு முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததாக வரலாறு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரி ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எல்லா சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்தப்படும்.
இரவு நேரங்களில் நான்கு கால பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், பாராயணம் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடைபெறும். பக்தர்கள் விரதம் இருந்து கண் விழித்து சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்வார்கள்.
மேலும் இந்த நாள் அறிவியல் ரீதியாக ஒரு சிறந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது சிவராத்திரி நாளில் பூமியானது பெரிய நீள்பட்ட பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பகுதிக்கு சற்று மாறும் நிலையில் இருப்பதால் பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள மின்காந்த அலைகளின் இயக்கத்திற்கு காரணமாக கருதப்படும் ஈதர்’ எனப்படும் கதிர்வீச்சு எப்போதும் பூமியை நோக்கி நேராகவும் சுருள் வடிவிலும் பாய்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக மகா சிவராத்திரி அன்று இந்த அகதிர்வீச்சுகள் சுருள் வடிவில் அதிக ஆற்றலுடன் செயல்படுவதாக நம்மப்படுகிறது.
இந்த ஆற்றல் மனித உடலில் முதுகுத்தண்டின் வழியாக சென்று நமக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கிறது. இவை நமக்கு உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைப்பதற்கு உதவிஅதோயாக இருப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி மன அழுத்தங்கள், சோர்வுகள் ஆகிவற்றை குறைத்து உடலின் உறுப்புக்கள் அவை சீராக இயங்க நமக்கு உதவுகிறது. எனவே இந்த நாளில் முடிந்த வரை திறந்த வெளியில் குறிப்பாக வீட்டில் மாடி பகுதியில் அமர்ந்து தியானம் செய்யலாம்.
முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தியானம் செய்யலாம். அதிலும் இந்த தியானத்தை இரவு 11 முதல் 2 மணி வரை தியானம் செய்வது ஆன்மீக ரீதியாக நமக்கு நிறைய மாற்றங்களை கொடுக்கிறது. அதனால் மகா சிவராத்திரி அன்று முடிந்தவர்கள் இதை செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் சிவபெருமானுடைய அருளும் அறிவியல் ரீதியாக இந்த கதிர்வீச்சுகளால் ஒரு நல்ல ஆற்றலும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |