பெண்கள் மாணிக்கம் அணிந்தால் கட்டாயம் இது நடக்குமாம்.. கவனமாக இருங்கள்
பெண்கள் அனைவருமே தாங்கள் விதவிதமாக நகைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். அதில் அவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல் மாணிக்கம் ஆகும். காரணம் மாணிக்ககல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் நம்மை எளிதாக ஈர்க்க கூடிய தன்மையையும் பெற்று இருக்கிறது.
அதாவது நவகிரகங்களில் முதன்மையான சூரிய பகவானின் அம்சமாக இந்த மாணிக்கங்கள் கருதப்படுகிறது. பெண்கள் இந்த மாணிக்க கல் அணிவதால் அவர்களுக்கு 10 முக்கியமான நன்மைகள் நடக்கிறது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. தீராத மனக்குழப்பங்கள் இருந்தால் மாணிக்க கல் அணியும் பொழுது நிச்சயம் ஒரு நல்ல தெளிவான மனநிலை பிறக்கும்.
2.பெண்களுக்கு வயிறு தொடர்பான எந்த ஒரு பிரச்சனைகள் இருந்தாலும் மாணிக்க கல் அணிவதால் அவை விரைவில் குணமாகும்.

3. மாணிக்க கல் அணிபவர்களுக்கு எப்பொழுதும் அவர்களை சுற்றிலும் ஒரு பாதுகாப்பான வளையம் உருவாகின்றது. இதனால் இவர்கள் பொறாமை கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகள் இடம் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
4. வேலைக்கு செல்லும் பெண்கள் மாணிக்க கல் அணியும் பொழுது அவர்களுக்கு வேலையில் ஒரு நல்ல அங்கீகாரமும் உயர் பதவியும் கிடைக்கும்.
5. ஒரு மனிதனுக்கு கண் மற்றும் எலும்புகளுக்கு காரணியாக இருப்பவர் சூரிய பகவான். எனவே ஒருவர் மாணிக்க கல் அணியும் பொழுது அவர்களுக்கு கண் பார்வை மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
6. மாணிக்க கல் அணிவதால் தொழிலில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வதோடு பொருளாதாரமும் சிறப்பாக அமையும்.
7. மன அழுத்தங்களை சந்தித்து இருக்கக்கூடிய பெண்களாக இருந்தால் மாணிக்க கல் அணியும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்கும்.

8. மாணிக்கம் இதயத்துடன் தொடர்புடையது. அதனால் பெண்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக்கும். இதய நோய் தொடர்பான நோய் வராமலும் இவை தடுக்க உதவுகிறது.
9. திருமணமான பெண்கள் மாணிக்கம் அணிவதால் அவர்களுக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் நல்ல இல்லற வாழ்க்கை கிடைக்கிறது.
10. மாணிக்கம் சூரியபகவானுடைய ஆதிக்கத்தை கொண்ட கல் என்பதால் இதை அணியும் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் தன்னம்பிக்கையும் எதையும் துணிச்சலாக செய்யக்கூடிய தலைமைத்துவ பண்பும் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |