புரட்டாசி வெள்ளிக்கிழமை இந்த செடியை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும்

By Sakthi Raj Sep 20, 2024 12:30 PM GMT
Report

புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் மஹாலக்ஷ்மி தாயாருக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இவர்கள் இருவரும் வாசம் செய்யும் செடி தான் துளசி.பெரும்பாலான வீடுகளில் துளசி செடி கட்டாயம் இருக்கும்.துளசி செடி ஆனது ஆன்மீகத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்த ஒன்று.

அப்படியாக புரட்டாசி மாதத்தில், துளசியை வணங்குவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் மிகுந்த விஷேசமாக சொல்லப்படுகிறது. . இதுவரை இல்லாவிட்டாலும் வீட்டில் துளசிச்செடி வைத்து, புரட்டாசி மாதத்தில் வளர்க்கத் தொடங்குங்கள்.

புரட்டாசி என்பது விரதம் மேற்கொள்வதற்கும் திருமலை தரிசிப்பதற்கு ஒரு சிறந்த மாதம் . மேலும்,புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் நமக்குமான மாதம். அதாவது நாம் இந்த மாதத்தில் கண்டிப்பாக துளசி வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.

புரட்டாசி வெள்ளிக்கிழமை இந்த செடியை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும் | Benifits Of Planting Tulasi At Home

இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் தான் போய் முடியும்.

துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தன் நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம்.

பண கஷ்டம் விலக வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்

பண கஷ்டம் விலக வெள்ளிக்கிழமை இதை செய்யுங்கள்


இந்த மாதத்தில், தன் சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். மகாவிஷ்ணுவின் திருமார்பில் அமர்ந்திருக்கும் மகாலக்ஷ்மி, அங்கிருந்தபடியே உலகையும் மக்களையும் ஆசீர்வதித்துக் காத்தருளும் மகாலக்ஷ்மி, துளசியில் வாசம் செய்கிறாள்.

புரட்டாசி வெள்ளிக்கிழமை இந்த செடியை வீட்டில் வளர்த்தால் செல்வம் பெருகும் | Benifits Of Planting Tulasi At Home

இந்த மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தும் போது, தன் மணாளனனின் தோளில் சேரப்போகிறோம் அணிகலன் போல் நம்மை சார்த்தப் போகிறார்கள் என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலக்ஷ்மி. துளசியானது மிகவும் புனிதமான செடியாக இந்துக்களால் கொண்டப்படுகிறது.

அதில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். பெருமாளுக்கு சார்த்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து ஸேவிப்பதும் மகா புண்ணியம் என்று போற்றுகிறது புராணங்கள்.

மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருளும். துளசிச்செடி வளர்ப்பதால் இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி நிலவும்.

ஆனந்தம் வழியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். துளசி செடியைச் சுற்றி, வலம் வந்து வழிபாடு செய்யும் போது ஹரே ராம ஹரே கிருஷ்ண மஹாமந்திரம் சொல்வது சாலச்சிறந்தது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US