கேட்டதை கொடுக்கும் புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்
கேட்டதை கொடுப்பவர் கிருஷ்ணர்.அப்படியாக அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது.அன்றைய நாளில் பெருமாளை வழிபாடு செய்து விரதம் இருந்தால் வாழ்க்கையில் எல்லா சந்தோசம் கிடைக்கபெறுவோம்.
ஆக இன்று மிகவும் விஷேசமான புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை பெருமாளை எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
இன்று முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலையும் தாயாருக்கு மல்லிகைப் பூ மாலை சார்த்தி வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும்.
மேலும்,ஜாதகத்தில் சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட்டால், கிரக சூழ்ச்சியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகும். பலருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி யை குலதெய்வமாக இருப்பார்.அவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் குடும்பங்களோடு சேர்ந்து மாவிளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப் படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது. அன்று பெருமாளை மனதார நினைத்து விரதம் இருக்க புண்ணியங்கள் வந்து சேரும்.
இந்த புரட்டாசி மாதத்தில் திருப்பதி பெருமாளை, சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். முடிந்தவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வழிபட்டு வரலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம்.
மேலும் அந்த படத்திற்கு மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்யலாம். துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.
மேலும்,பச்சரிசி மாவை, தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடலாம். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால், வறுமை நீங்குவதோடு வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
கண்டிப்பாக கோயிலுக்கு சென்று புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனதைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையில், ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுங்கள்.
கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தர்மத்தின் தலைவன் தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |