Vastu Tips: வீட்டில் புத்தர் சிலை வைப்பதற்கான சிறந்த திசை இது தான்
பொதுவாகவே அனைவருக்கும் பண கஷ்டம் என்பது வர தான் செய்யும். இதில் இருந்து மீண்டெழுந்து எப்படி வரலாம் என்று தான் கட்டாயம் யோசிக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் ஒரு சில வாஸ்து குறைப்பாட்டின் காரணமாகவும் நிதி நிலைமையில் பிரச்சினைகள் ஏற்படும்.
இந்து மக்கள் பல நெறி முறையை கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி அவர்கள் ஒரு நல்ல நிலைக்கும் வருகின்றனர்.
பல புராணங்களில் வீட்டில் சாமி சிலை வைத்து வழிபடுவது பற்றி கூறியிருக்கின்றது. அந்த சாமி சிலைகளில் புத்தர் சிலையும் அடங்கும்.
புத்தரின் சிலையானது ஒருவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தால், அந்த வீட்டில் உள்ள அனைத்து நேர்மறை ஆற்றல்களும் நீங்கும் என்று அர்த்தம்.
இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட புத்தர் சிலையை எந்த திசையில் வைக்கலாம் எனவும் எங்கு வைக்கக் கூடாது என்றும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
புத்தர் சிலை வைக்க சிறந்த திசை?
புத்தர் சிலையை வலுவான மைய புள்ளியை வைக்க வேண்டும். இதற்கு சிறந்த இடமாக இருப்பது வீட்டின் பிரதான அறையில் வெளிச்சம் உள்ள இடத்தில் வைக்கலாம்.
வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, கிழக்கு திசையில் சிலையை வைக்கலாம். அப்படி கிழக்கு திசையை நோக்கி வைக்க முடியவில்லை என்றால் வடக்கு திசையில் வைக்கலாம்.
ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே புத்தர் சிலை வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
படுக்கை அறை, சமையலறை மற்றும் குளியலறை போன்ற இடங்களில் வைப்பதை தவிர்ப்பது நல்லதாகும்.
வீட்டில் தோட்டம் இருந்தால் அதன் வலது மூலையில் சிலையை வைக்கலாம்.
பூஜை அறையிலும் சிலையை வைக்கலாம். ஆனால் மற்றைய சிலைகளை விட புத்தர் சிலை நன்றாக விளங்குவது போல் இருக்க வேண்டும்.