மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும் தொழில் என்ன தெரியுமா?
பொதுவாகவே, எல்லோருக்கும் ஒரு படித்து முடித்து தொழிலையே தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உண்டாக்கும். நாம் என்ன தொழிலை சரியாக தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும் என்று. குறிப்பாக தற்பொழுது காலகட்டங்களில் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நமக்கு வளர்ச்சி என்கின்ற ஒரு கண்ணோட்டத்தில் நம் பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது.
இருப்பினும் ஜோதிட ரீதியாக ஒவ்வொருவருடைய ராசியின் தன்மை, ஜாதக அமைப்பை பொறுத்து அவர்களுடைய மனநிலை மாறுபடுகிறது. அந்த அமைப்பின் வழியாகவே அவர்கள் தொழிலை தேர்ந்தெடுக்கவும் அவை தூண்டுகிறது.
அப்படியாக, மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாகவும் நல்ல வளர்ச்சியை கொடுப்பதாகவும் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம். ஜோதிடத்தில் முதல் இரண்டு ராசியான மேஷம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் வளர்ச்சியை கொடுக்கக்கூடியது என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே இலட்சியவாதிகளாக இருப்பார்கள். இவர்கள் புத்திசாலித்தனமாகவும் துடிப்புடனும் வேலை செய்யக்கூடியவர்களாக உள்ளார்கள். அந்த வகையில் இவர்கள் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அந்த நேரத்தில் திசை தடுமாறாமல் துணிச்சலாக முடிவெடுப்பார்கள்.
அதேபோல் இவர்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக்கூடிய நிலை பிடிப்பதில்லை. இவர்களுக்கு சுயமாக தொழில் செய்வது, பங்கு சந்தை, மார்க்கெட்டிங் மேலாளர் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை ராணுவம் காவல்துறை தீயணைப்பு மற்றும் அரசியல் விளையாட்டு துறை ஆகியவை இவர்களுக்கு சவாலானதாகவும் இவர்களுக்கு பிடித்தமானதாகவும் அமைகிறது. அதேபோல் இவர்கள் ஒரு காலமும் ஒருவருக்கு கீழ் வேலை பார்ப்பதை விரும்புவதில்லை.
ரிஷபம்:
ரிஷப ராசியை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் எப்பொழுதும் நிலையான தன்மையையும், வேலை பாதுகாப்பையும் விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்கள் பணத்தை நிர்வாகம் செய்வதில் மிகச் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்.
இவர்கள் பணத்தை நிர்வாகிக்கக்கூடிய பொறுப்புகளும் தேடி வரும். இவர்கள் வங்கி துறை கணக்கு, அறிவியல் ஆராய்ச்சி, கல்வித்துறை மருத்துவம் மற்றும் செவிலியர் பணி, பொறியியல் கட்டிடக்கலை, ரியல் எஸ்டேட் கலை மற்றும் இசைத்துறை போன்றவை இவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இவர்கள் எப்பொழுதும் நிலையற்ற மற்றும் அவசர சூழலில் வேலை பார்க்கக்கூடிய எந்த ஒரு தொழிலை செய்தாலும் இவர்களுக்கு பிடிக்கவில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |