தடைப்பட்ட காரியங்கள் உடனே கைகூடி வர- வெற்றிலை மாலையின் மகத்துவம்
தமிழ் கலாசாரத்தில் வெற்றிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும், சுப மற்றும் அசுப காரியங்களின் போதும் தாம்பூலத்தில் வெற்றிலை வைப்பது தொன்றுதொட்டு வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இதனை மாலையாக தொடுத்து வழிபட்டால் நல்ல பலன்கள், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
வெற்றிலை மாலையை எப்படி தொடுக்க வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்னென்ன? எப்படி வழிபட வேண்டும்? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெற்றிலை மாலை ஏன்?
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா பீராட்டியை பார்த்து வருவதற்காக ராமன் அனுமனை இலங்கைக்கு அனுப்பினார்.
அங்கு அசோகவனத்தில் சீதா பிராட்டியை பார்த்தும் ”ராமர் விரைவில் உங்களை மீட்பார்” என்ற நற்செய்தியை கூறினார். இதைக்கேட்டதும் மனம் குளிர்ந்து போன சீதா பீராட்டி, அருகில் இருந்த வெற்றிலையை மாலையாக தொடுத்து அணிவித்தார்.
இதன் காரணமாகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டப்படுகிறது. இதனால் தடைபட்ட காரியங்கள் நல்லவிதமாய் முடிவடையும், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
வெற்றிலை மாலை கட்டும் முறை வெற்றிலை மாலை கட்டும் போது ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
இரண்டு வெற்றிலைகளை எடுத்துக்கொண்டு அதன் காம்பு பகுதியை கிள்ளிவிட்டு கொட்டை பாக்கு அல்லது சுருள் பாக்கு வைத்து கட்ட வேண்டும், இது இரண்டு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஒற்றை படை எண்ணிக்கையில் மாலையாக கட்டி அனுமனுக்கு சாற்றினால் நல்லது.
ஒரு வெற்றிலையை மட்டும் வைக்க கூடாது, இதே போன்று வெறும் வெற்றிலையாகவும் வைக்க கூடாது.
அனுமனுக்கு படைக்கும் முறை சனிக்கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது, அன்றைய தினம் 108 வெற்றிலை கொண்ட மாலையாக சாற்றி வைவேத்தியமாக தயிர் சாதத்தை படைக்கலாம்.
மாலை சாற்றிய பின்னர் தொடர்ந்து 21 நாட்கள் அல்லது 21 சனிக்கிழமைகளில் அனுமனை 11 முறை வலம் வந்து மனமுறுகி வேண்டிக் கொள்ளுங்கள்.
மனதில் எந்தவித பிரச்சனைகளையும் யோசிக்காமல் ”ராம், ராம்” என்று கூறியபடியே சுற்றி வரவும்.
இவ்வாறு செய்து வந்தால் கடன் தொல்லை, நோய் நொடி, திருமணத்தடை, என அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் வளம்பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |