தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் வெற்றிலை தீப ரகசியம்
ஒரு சிலருக்கு வீடுகளில் தொடர்ந்து கஷ்டம் கடன் தொல்லை, பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை குடும்பத்தில் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைவதில் தாமதம் போன்ற கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால், உண்மையில் இந்த உலகத்தில் துன்பம் என்று இருந்தால் நிச்சயம் அதற்கு நிரந்தர தீர்வு உண்டு என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தீராத துன்பத்தை இறைவன் எந்த ஒரு மனிதனுக்கும் கொடுக்கவில்லை.

நாம் இறைவழிபாடு தொடர்ந்து செய்கின்ற பொழுது எப்பேர்ப்பட்ட பிரச்சனையும் நம்மை விட்டு விலகுகிறது. அப்படியாக, தீராத பண பிரச்சனை, மனப்பிரச்சினை, குடும்பப் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு வெற்றிலை தீபம்ஏற்றி வழிபாடு செய்வது ஒரு சிறந்த பலன் கொடுக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
வழிபாடு செய்ய வேண்டிய முறை:
இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்கு வீட்டின் நிலை வாசலில் உள் பக்கத்தில் நோக்கியவாறு அமர்ந்து செய்ய வேண்டும். ஒரு தட்டு மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய வெற்றிலை சிறிதளவு கற்கண்டுகள் மண் அகல் விளக்கு மற்றும் நெய் மஞ்சள் திரிஎடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தட்டின் மேல் மஞ்சள் குங்குமம் தடவிய வெற்றிலையை வைத்து அதனுடன் கற்கண்டுகளையும் வைக்க வேண்டும். அதன்மேல் விளக்கில் நெய் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றிய பிறகு நீங்கள் "மகாலட்சுமி தாயே வருக வருக" என்று 27 முறை மனதார பாராயணம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாடுகளை தொடர்ந்து 48 நாட்கள் நீங்கள் செய்து வாருங்கள். நிச்சயம் உங்களுடைய மனநிலையிலும் குடும்பத்திலும் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |