பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை

By Sakthi Raj Nov 26, 2026 06:30 AM GMT
Report

வாழ்க்கையில் எல்லா நேரங்களும் நாம் நினைத்த விஷயங்கள் நடப்பதில்லை சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்காமல் போகலாம். கடினமாக உழைப்போம் ஆனால் தோல்வி கிடைத்திருக்கும். நம்பியவர்கள் கூட கைவிட்டு இருப்பார்கள். தொடர்ந்து பிரச்சினையால் மனம் சோகப் அடைந்திருக்கும்.

ஆனால், இது எல்லாம் என்றுமே நம்முடைய வாழ்க்கையில் ஒரு முடிவல்ல. அதை எல்லாம் கடந்து மீண்டும் எழுந்து நிற்பதில் தான் உண்மையான பலமும் வெற்றியும் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் மனம் தளர்ந்த அர்ஜுனனுக்கு கூறக்கூடிய அறிவுரையை பார்ப்போம்.

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை | Bhagavad Gita Lessons On Resilience

மகாபாரத போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு எதிரே இருக்கக்கூடிய அவருடைய உறவினர்களையும் குருமார்களையும் பார்த்த அவர் மனம் சோர்ந்து போரிட முடியாமல் அவருடைய வில்லை வைக்கிறார். அப்பொழுது அவருக்கு கிருஷ்ண பகவான் வழங்கிய அந்த அறிவுரை பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை எடுத்துரைக்கிறது.

குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது? பகவத் கீதை சொல்லும் ரகசியம்

குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது? பகவத் கீதை சொல்லும் ரகசியம்

பகவத் கீதை – அத்தியாயம் 2, ஸ்லோகம் 3
"க்லைப்யம் மா ஸ்ம கமஹ பார்த நைதத்த்வய்யுபபத்யதேக்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப"

இதன் பொருள்:

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்கிறார் இத்தகைய மன தளர்ச்சிக்கு என்றுமே நீ இடம் கொடுக்காதே. வீரம் பொருந்திய உன்னுடைய வலிமைக்கு பொருந்தாத இந்த பலவீனத்தை கைவிட்டு எழுந்து நில் என்று கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

இந்த இடம் நமக்கு மனம் தளர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் எந்த நிலையிலும் மனம் தளர்ந்து முடங்கி விடாமல் மன உறுதியுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது.

பகவத் கிதை: தோல்வியைக் கண்டு பயமா? பகவான் கிருஷ்ணர் சொல்லும் அறிவுரை | Bhagavad Gita Lessons On Resilience

தோல்வி வந்தால் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் தோல்வி என்பது இயல்பானது. அந்த தோல்வி தான் பல நேரங்களில் நாம் யார் என்கின்ற உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. ஆக, அந்த தோல்வியிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு தோல்வியோ பல தோல்வியோ நம்முடைய வாழ்க்கையை முழுமையாக தீர்மானிப்பதில்லை. இன்று முடியவே முடியாது என்ற ஒரு விஷயம் நாளை முயற்சித்தால் நமக்கு சாத்தியமாகலாம். எனவே கடந்த கால தோல்விகளை எல்லாம் நினைத்து வருந்தாமல் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றுவதற்கான முயற்சி இன்றும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது.

இன்றைய சிந்தனை:

ஆக, வாழ்க்கையில் எத்தனை முறை நீங்கள் கீழே விழுந்தாலும் ஒவ்வொரு முறையும் கீழே எதற்காக விழுந்தோம் என்கின்ற அந்த தவறை திருத்திக் கொண்டு மீண்டும் நமக்கான ஒரு வாய்ப்பு உடலில் உயிர் உள்ளவரை இருக்கிறது என்று எண்ணி எழுந்து நின்று மன உறுதியோடு போராடுங்கள். அதில் தான் உண்மையான பலம் இருக்கிறது.     

 குறிப்பு:

இது ஆன்மீக மற்றும் பொதுவான தகவல் நோக்கத்திற்கான உள்ளடக்கம் மட்டுமே. தொடர்ந்து மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, அல்லது மனநல பிரச்சனைகள் இருந்தால் மன நல மருத்துவரை அணுகுவது நல்லது. 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US