பகவத் கீதை- ஆபத்துகளில் இருந்து நம்மை காப்பது எப்படி?
மனிதர்களுடைய வாழ்க்கை எதிர்பாராத ஒரு பயணம். இந்த பயணத்தில் எதிர்பாராத விதமாக தான் அதிர்ஷ்டமும், எதிர்பாராத விதமாகத்தான் பெரும் இழப்புகளும் நமக்கு நடக்கிறது. அதாவது நாம் ஒன்றை மனதில் நினைத்துக் கொண்டு செயல்பட்டோம் என்றால் இந்த பிரபஞ்சம் நமக்கு வேறு ஒரு பதிலை பல நேரங்களில் கொடுப்பதை நாம் பார்க்க முடியும்.
அந்த வேளையில் மனம் வேதனையின் வலி தாங்காமல் சுக்கு நூறாக உடைந்து விடும். இவ்வாறான நேரத்தில் நாம் நம்முடைய இக்கட்டான நிலையில் எவ்வாறு கையாள்வது என்பதை பற்றி பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் நமக்கு எடுத்துரைக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.
ஒரு மனிதனுடைய நல்ல எண்ணமும், அவன் செயல் தர்மம் நிறைந்ததாகவும் இருந்தால் அவர்களுக்கு நடக்கக்கூடிய இழப்புகள் கூட அவர்களை பாதுகாப்பதாகவே அமைகிறது என்கிறார் கிருஷ்ணர். அதனால் சமயங்களில் நமக்கு ஏற்படக்கூடிய துயரங்கள் கூட நமக்கு நடக்க இருக்கக்கூடிய பேர் ஆபத்திலிருந்து காப்பாத்த கூடியதாக அமைகிறது.
எப்பொழுதுமே தெளிவான எண்ணமும் குணமும் கொண்ட மனிதன் தங்களை வெளிகாட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். தங்களுடைய வேலையை அவர்கள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான அங்கீகாரம் எப்பொழுதும் கிடைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
அவர்களுடைய கடமைகள் மீது அவர்கள் எப்பொழுதும் கவனமாக இருந்து கொண்டு செயல்பட கூடியவர்களாக இருப்பார்கள். ஆதலால் அவ்வாறான குணமே அவர்களுக்கு பல வேளையில் அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றக் கூடியதாகவும் அவர்களை அசைக்க முடியாக ஒரு மனிதனாகவும் மாற்றுகிறது.
மேலும் மனிதர்களுடைய வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல தான். ஆனால் அவர்கள் நல்ல மனதோடு அவர்களுடைய செயலில் தூய்மையோடும் இருக்கும் பொழுது இந்த பிரபஞ்சமானது அவர்களை பல இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்றுகிறது. அந்த நேரத்தில் அவர்களுக்கு நடக்கக்கூடிய இழப்புகள் கூட அவர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு நகர்வாக தான் இருக்கும் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
அதனால் எப்பொழுதுமே நம்முடைய கடமையை தவறாமல் செய்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு புயல், பூகம்பம் போல் ஒரு துன்பம் வருகிறது என்றால் அவை அனைத்தும் நம்மை காப்பாற்ற வரக்கூடிய ஒரு இயற்கையின் கவசமாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆதலால் எண்ணம் தூய்மையாக வைத்து கொள்வோம். பிறகு அந்த தூய்மை நம்மை காக்கும் கவசமாக மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







