297 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அற்புத நிகழ்வு- இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
ஜோதிட சாஸ்திரப்படி கிரகங்களின் அரிய வகை சேர்க்கை தான் மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
அப்படியாக, சுமார் 297 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அரிய வகை கிரக சேர்க்கை நடக்க உள்ளது.
இந்த நிகழ்வானது கடந்த 1728 ஆம் ஆண்டு நடந்ததை அடுத்து அதன் பிறகு தற்பொழுது 2025 ஆம் ஆண்டு இந்த கிரக சேர்க்கை நடக்க இருக்கிறது.
அதாவது, சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி இந்த 6 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட ராசியில் மிக நெருக்கமான நிலையில் நேர்கோட்டில் வர இருக்கின்றது.
இந்த அற்புதமான அரிய வகை சேர்க்கைகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2025 ஆண்டு நடக்க உள்ளது.
அந்த நாளில் தான் ரக்ஷா பந்தன் கொண்டாட்டமும் நடக்க இருக்கின்றது. மேலும், இந்த ஆண்டு சூரியன் கடக ராசியிலும், சந்திரன் மகர ராசியிலும், செவ்வாய் கன்னி ராசியிலும், புதன் கடக ராசியிலும், குரு மற்றும் சுக்கிரன் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் இருக்கிறார்கள். இதுபோன்ற சேர்க்கை 1728 ல் தான் நிகழ்ந்தது.
இந்த அரிய வகை சேர்க்கையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது. அவை எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த அரிய வகை சேர்க்கையினால் மிகப்பெரிய அளவில் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்க உள்ளது. மனதில் உள்ள கவலைகள் விலக உள்ளது. பொருளாதாரத்தில் சிறந்த மாற்றத்தை சந்திக்க உள்ளார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்க உள்ளது. நினைத்ததை சாதிப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த 6 கிரகங்களின் அரிய வகை சேர்க்கைகள் வெளிநாடு செல்லும் யோகத்தை கொடுக்க உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த முன்னேற்றம் வாழ்க்கையில் பெற போகிறீர்கள். நீங்கள் இழந்த மரியாதை மற்றும் பெயரை மீண்டும் அடைவீர்கள். புதிய வீடு சொத்துக்கள் வாங்கும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்க உள்ளது. உங்களுக்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்த அளவில் வெற்றி காணும் நேரம். உங்களின் திறமைகள் வெளிப்படும் காலம். பெயரும் புகழும் பெறப்போகிறீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







