நினைத்ததை நிறைவேற்றும் பிரியாணி இலை பரிகாரம்
உணவில் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருள் பிரியாணி இலை, இதில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடண்டுகள் கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இந்த பிரியாணி இலையை கொண்டு பரிகாரம் செய்தால் நினைத்தது நிறைவேறும் என்று உங்களுக்கு தெரியுமா?
இந்த பதிவில் அதை எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
முழுமையான நம்பிக்கையுடன் பிரியாணி இலையை உங்களது கோரிக்கையை எழுதினால் அது நிச்சயம் நிறைவேறும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு வரவேண்டிய பணம் பாக்கி இருந்தால், அந்த கோரிக்கையை இலையில் எழுதி பீரோவில் வைத்து விடுங்கள்.
ஏழு நாட்கள் கழித்து இலையை எடுத்து எரித்துவிட வேண்டும், அந்த சாம்பலை காற்றோடு காற்றாக கலந்துவிட வேண்டும் அல்லது தண்ணீரில் கரைத்துவிட வேண்டும்.
காலை அல்லது மாலை நேரங்களில் இந்த பரிகாரத்தை செய்யலாம், மீண்டும் புதிதாக ஒரு இலையை எடுத்து இதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு உங்களது பணம் திரும்ப வரும் வரை தொடர்ந்து செய்திடுங்கள், முழு நம்பிக்கையுடன் இதை செய்யும் போது விரைவில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
பணம் தவிர வேறு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அதை கோரிக்கையாக எழுதி வைத்தால் நிச்சயம் நிறைவேறும்.
கோரிக்கைக்கு ஏற்றவாறு இடத்தையும் தெரிவு செய்வது அவசியம், திருமணம், குழந்தை பாக்கியம் என்றால் பூஜை அறையிலும், நன்றாக தூக்கம் என்றால் மெத்தைக்கு அடியிலும் வைக்கலாம்.