Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்களாம்

By Manchu Jun 15, 2025 01:30 PM GMT
Report

எண் கணித ஜோதிடத்தின்படி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பிறந்தவர்கள் முன்கூட்டியே நடப்பதை தெரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

எண் கணிதம்

எண் கணிதம் என்பது ஒருவர் பிறந்த தேதியினை வைத்து அவர்களது ஆளுமை, வாழ்க்கை முறை, ஆன்மீக நுண்ணறிவு இவற்றினை தெரிந்து கொள்ள முடியும்.

அதாவது கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பிறந்தவர்கள், தங்களுக்கு நடக்கப்போவதை முன்கூட்டியே உணரும் சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆகவே உங்களது பிறந்த தேதியும் இங்கு உள்ளதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்களாம் | Birth Dates Of These People Intuitive Psychic

மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நம் வீடுகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நம் வீடுகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

எண் 2

எண் ஜோதிடத்தின்படி 2ம் எண்ணின் பிறந்தவர்கள், மூளையால் அல்ல மனதால் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாம். மனரீதியாக பதில் அளிக்கும் சக்தி கொண்ட இவர்கள், மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளை சொல்லாமல் புரிந்து கொள்வார்கள். 

இவர்கள் மனித நேயத்துடன் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் செய்வார்கள். குறிப்பாக விபத்து ஏதாவது நடக்கவிருக்கின்றது என்றால் முன்கூட்டியே இவர்களுக்கு தெரிந்துவிடுமாம்.

Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்களாம் | Birth Dates Of These People Intuitive Psychic

மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நம் வீடுகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நம் வீடுகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

எண் 9

இதே போன்று 9ம் எண்ணில் பிறந்தவர்களும் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களுக்கு மனிதாபிமானம் அதிகம் என்றே கூறலாம்.

பிறருக்கு சேவை செய்வதிலும், வழிக்காட்டுவதிலும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பார்கள். முக்கியமாக இவர்களுக்கு நடக்க போகக்கூடிய விஷயங்கள் முன்கூட்டியே தெரிந்துவிடும் என்று கூறப்படுகின்றது.

Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்வார்களாம் | Birth Dates Of These People Intuitive Psychic

எண் 16 

எண் கணிதத்தின்படி 16ம் தேதி பிறந்தவர்கள் ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைந்து காணப்படுவார்கள். முக்கிய பாதை மாற்றத்தினை வாழ்க்கையில் காணும் இவர்கள், தங்களது கனவு மூலம் எதிர்காலத்தில் நடக்கும் விடயத்தினை தெரிந்து கொள்வார்கள்.

எண் 25  

25ம் தேதியில் பிறந்தவர்கள் அதிகமாக ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும், உள் உணர்வுக்கு இடையே சமநிலையை கொண்டிருப்பவராகவும் இருப்பார்கள். ஏதாவது ஒரு நல்லது அல்லது கெட்ட காரியம் நடக்க இருக்கின்றது இவர்களுக்கும் முன்கூட்டியே தெரிந்துவிடுமாம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.   
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US