மனைவி பேச்சை மீறாத ஆண்கள் நட்சத்திரங்கள் - நீங்க எப்படி?

By Sumathi Dec 08, 2025 02:14 PM GMT
Report

ஜோதிடத்தின்படி சில நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் இயல்பாகவே தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்குவார்களாம். குடும்பத்தில் உள்ள மற்றவர்களை விடவும் தங்கள் மனைவிகளை அதிகமாக நேசிப்பார்களாம். அவ்வாறு உள்ள ஆண்கள் நட்சத்திரங்கள் குறித்து பார்ப்போம்.

மனைவி பேச்சை மீறாத ஆண்கள் நட்சத்திரங்கள் - நீங்க எப்படி? | Birth Stars Men Who Love Wife Tamil

சதயம்

தங்கள் மனைவி மீது அளவில்லாத அன்பை பொழிகின்றனர். குடும்ப அமைதிக்காக மனைவியின் வார்த்தைகளை மிகவும் மதிக்கின்றனர். மனைவியின் மனம் காயப்படுவதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.

ஹஸ்தம்

குடும்பத்தில் அமைதியான சூழலை விரும்புகிறார்கள். தங்கள் மனைவியிடம் பேசி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள். மனைவியின் ஆசைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பூசம்

குடும்ப உறவுகளில் மனைவியின் முக்கியத்துவத்தை அறிந்து நடந்து கொள்கிறார்கள். மற்ற அனைவரையும் காட்டிலும் மனைவியை அதிகமாக நேசிக்கிறார்கள். மனைவி என்ன சொன்னாலும் அதை கவனமாக கேட்கிறார்கள். மனைவிக்கு எந்த குறைபாடும் ஏற்பட அனுமதிப்பதில்லை.

மனைவி பேச்சை மீறாத ஆண்கள் நட்சத்திரங்கள் - நீங்க எப்படி? | Birth Stars Men Who Love Wife Tamil

திருவாதிரை

தங்கள் மனைவியை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார்கள். அவர்கள் விரும்புவதை உடனே வாங்கி கொடுப்பார்கள். தங்கள் மனைவியின் பேச்சைக் கேட்டு, அவர்களின் விருப்பப்படி செயல்படுவார்கள். அவர்கள் சொல்வதை தவறாமல் பின்பற்றுவார்கள். 

ரோகிணி

இயல்பாகவே அன்பானவர்கள். அவர்கள் தங்கள் மனைவிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனைவியின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். திருமண வாழ்க்கையை புனிதமான பந்தமாக கருதுகிறார்கள்.  

ரொமான்டிக்கான 4 பெண் ராசிகள் - உங்க ராசி என்ன?

ரொமான்டிக்கான 4 பெண் ராசிகள் - உங்க ராசி என்ன?

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US