மனிதர்கள் எல்லோரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதில் பலரும் தாங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வலிமை இருந்தாலும், சில சூழ்நிலை காரணமாக அதை கைவிட்டு விடுவார்கள்.
அந்த வகையில், குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தாங்கள் நினைத்ததைசாதித்து ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு வாழ்வார்களாம். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசி பொருத்தவரை மிகுந்த லட்சியத்தோடு வாழக் கூடியவர்கள். இவர்கள் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் முழு ஈடுபாட்டோடு அதை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்யக் கூடியவர்கள் என்பதால் இவர்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வலிமையை இயல்பிலே பெற்றிருப்பார்கள். ரிஷப ராசியினர் சமுதாயத்தில் எப்பொழுதும் தாங்கள் ஒரு மிகப்பெரிய அளவில் மதிப்போடு வாழ நினைப்பவர்கள்.
துலாம்:
துலாம் ராசியை பொறுத்தவரை எதையும் சம நிலையாக எடைபோட்டு வாழக்கூடியவர்கள். இவர்கள் யாரிடமும் தேவையில்லாத வாக்குவாதம் பிரச்சனைகளோ வைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் இவர்களுடைய வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள்.
அது மட்டுமல்லாமல் லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழ்வது வீண் என்று ஒரு தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்கள். பெரும்பாலும் இவர்கள் ஒரு விஷயத்தை கையில் எடுத்து விட்டார்கள் என்றால் அதன் வெற்றியடையாமல் அமர மாட்டார்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு போட்டி என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஏதேனும் ஒரு விஷயத்தை அவர்கள் கையில் எடுத்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று எப்பொழுதும் என்ன கூடியவர்கள். ஆதலால் நிறைய சவால்கள் இவர்களுக்கு இவர்களே வகுத்துக் கொள்வதும் உண்டு.
ஆதலால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல இவர்கள் நிறைய மெனக்கிடல்கள் செய்ய விரும்புவார்கள். அதைவிட முக்கியமாக இவர்கள் எந்த இடத்திலும் தான் நினைத்ததை சாதிக்க முடியவில்லை என்று எண்ணாத அளவிற்கு உழைப்பை போட்டு வெற்றி பெறக் கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |