பலரும் அறிந்திடாத சிறப்பு வாய்ந்த தைப்பூசம் பற்றிய 20 முக்கிய தகவல்கள்
முருகப்பெருமானுக்கு உரிய பல்வேறு விஷேச நாட்களில் தைப்பூச திருநாள் மிக மிக முக்கியமான நாளாக இருக்கிறது. அன்றைய நாளில் பல முருக பக்தர்கள் விரதம் இருந்து பால் காவடி எடுத்து, பல்வேறு சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.
காரணம், முருகப்பெருமானை தைப்பூசம் தினத்தன்று வழிபாடு செய்தால் நாம் கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக, பலரும் அறிந்திடாத சிறப்புகள் இந்த தைப்பூச திருநாளில் அமைந்து உள்ளது, அதை பற்றி பார்ப்போம்.
1. தைப்பூசம் திருநாள் நம் இந்தியா மட்டும் அல்லாமல் இலங்கை சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் வெகு சிறப்பாக முருக பக்தர்களால் கொண்டாடப்படக்கூடியது.
2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் ஆலயங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
3. தைப்பூசம் தினமானது பௌர்ணமி தினத்தில் முழு நிலவோடு பூசம் நட்சத்திரம் வரும் பொழுது வருவதே தைப்பூசத்தை முக்கிய சிறப்பும் நிகழ்வாகும்.

4. முருகப்பெருமான் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு தைப்பூசத்தன்று தான். இந்த நிகழ்வு இன்றும் பழனியில் ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது.
5. மிகுந்த சிவ பக்தரான இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகளும் சேவைகளும் செய்தான். அவன் இந்த தைசப்புச திருநாளில் தான் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்திக்கும் அருளை பெற்றான்.
6. அதேபோல் சிதம்பரத்தில் நடராஜ பெருமான் உமாதேவியுடன் நடனம் ஆடி பக்தர்களுக்கு இந்த தைப்பூச தினத்தன்று தான் தரிசனம் கொடுத்தார்.
7. தைப்பூசம் தினமானது குரு பகவானை வழிபாடு செய்யவும் மிகவும் சிறந்த நாளாகும். இந்த நாளில் தான் தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும்.
8. தைப்பூச தினத்தன்று முருக பக்தர்கள் பழனிக்கு காவடி எடுத்து வழிநெடுக முருகனை நினைத்து பாடி வருவார்கள். அந்த பாடல்கள் தான் காவடி சென்று என்று அழைக்கப்பட்டன.
9. முருகப்பெருமானின் பல சிறப்புகளை கொண்டுள்ள விரதங்கள் இருந்தாலும் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
10. தைப்பூச தினத்தன்று நம் குழந்தைகளுக்கு காது குத்துவது, கிரகப்பிரவேசம் நடத்துவது, புதிய கல்வி கற்ப தொடங்குவது போன்ற விஷயங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது.

11. இந்த தைப்பூச திருநாளை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு தேன அபிஷேகம் நடத்தப்படும்.
12. மேலும், இந்த தைப்பூச திருநாளில் தொட்டுதெல்லாம் துலங்கும் என்ற ஒரு பழமொழியும் உண்டு. ஆக இந்த தைப்பூசத் திருநாளில் மனதில் என்ன நினைத்து வேண்டுதல் வைத்தாலும் அல்லது ஒரு செயலை செய்ய தொடங்கினாலும் அவை நன்மைகள் முடியும்.
13. இந்த தைப்பூச தினத்தன்று கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து சிவன் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் அவர்கள் பிரியாத வரத்தைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
14. இந்த தைப்பூச தினத்தன்று தான் முருகப்பெருமான் வள்ளி தெய்வியை மணமுடித்துக் கொண்டார்.
15. சூர பத்மனை அழிப்பதற்கு அன்னை பார்வதி தேதி அவருடைய சக்தி ஆற்றல் எல்லாவற்றையும் ஒன்று இணைத்து அதை வேலாக மாற்றி அந்த சக்தி வேலை முருகப்பெருமானுக்கு அளித்த நாள் இந்த தைப்பூசம். இந்த வேல் வித்யா சொரூபமானது.
16. மேலும், இந்த தைப்பூசத் திருநாளில் தான் உலகம் முதன் முதலில் நீரும் அதிலிருந்து உலகமும், உயிரினங்களும் தோன்றியதாக புராணங்களில் சொல்லப்படுகிறது.

17. ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் இந்த தைப்பூசத் திருநாளில் அவருடைய தங்கை சமயபுரத்து மாரியம்மன்க்கு சீர்வரிசைகள் கொடுப்பார். இந்த விழாவானது சமயபுரத்தில் பத்து நாட்கள் திருவிழாவாகவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
18. தைப்பூச திருநாள் அன்று பழனி முருகன் ஆலயத்தில் நடக்கும் அபிஷேக ஆராதனையை நாம் தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தோஷங்களும் விலகும். அதேபோல் இந்த நன்னாளில் சுபகாரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் கிடைத்து பிரியாத வரமும் பெறுவார்கள்.
19. இந்த தைப்பூசத் திருநாளில் தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்கின்ற பெண்ணினுடைய அஸ்தி கலசத்திலிருந்து அந்தப் பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
இந்த நிகழ்வு நடந்தது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் தான். இதை மயிலை புராணம் என்று கூறுவார்கள். இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே காணலாம்.
20. தைப்பூச திருநாளன்று சூரிய பகவான் ஏழாம் பார்வை சந்திரன் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் ஒரு மிக உயர்ந்த நிலையாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் சூரிய பகவானால் ஆத்ம பலமும் சந்திர பகவானால் நமக்கு மன பலமும் கிடைக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |