இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் எளிதாக மற்றவர்களை புரிந்து கொள்வார்கள்., யார் யார்?
By Yashini
நியூமராலஜி என்பது எண்களைப் பயன்படுத்தி ஒருவரின் ஆளுமை, விதி, வாழ்க்கைப் பாதை போன்றவற்றை அறியும் ஒரு கணித முறை.
ஒருவரின் பிறந்த தேதியை வைத்து, அதனுடன் தொடர்புடைய எண்ணை கணக்கிட்டு, அந்த எண்ணின் அடிப்படையில் பலன்களை அறியலாம்.
அந்தவகையில், நியூமராலஜி படி மற்றவர்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் இந்த 3 தேதியில் பிறந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
எண் 3
- அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்.
- இவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள்.
- ஆன்மீக விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
- அவர்கள் மற்றவர்களின் மனதைப் படிக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
- கடந்த காலத்தில் அனுபவித்த மோசமான அனுபவங்களிலிருந்து எளிதில் வெளியே வந்துவிடுவார்கள்.
- எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் வித்தையை அறிந்திருப்பார்கள்.
- அவர்களின் திறமையால் உடனிருப்பவர்களின் வாழ்க்கையையும் மாற்றுவார்கள்.
எண் 7
- அனைத்து மாதத்திலும் 7,16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்கள்.
- இவர்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகம் மதிக்கிறார்கள்.
- எந்த விடயத்தை பற்றியம் அதிக கவலைப்பட விரும்பமாட்டார்கள்.
- மற்றவர்களின் மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியும்.
- அவர்கள் எப்பொழுதும் புதிதாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
- எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர்கள்.
எண் 9
- அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள்.
- இவர்கள் பெரும்பாலும் மர்மமான தன்மை கொண்டவர்கள்.
- இவர்கள் மனதில் இருப்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது.
- அதேசமயம் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் எளிதில் புரிந்து கொள்வார்கள்.
- இவர்களால் மற்றவர்களின் வார்த்தைகளை துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |