Numerology: இந்த 3 தேதியில் பிறந்தவரா நீங்கள்? புகழின் உச்சம் நிச்சயம்
எண் கணிதத்தின்படி ஒருவர் பிறந்த தேதி வைத்து அவரது எதிர்காலத்தை, ஆளுமையை தெரிந்து கொள்ளலாம்.
செல்வாக்கு, புகழ், பிறரை கவர்ந்திருக்கும் வித்தியாசமான திறன் ஆகியவற்றால் விரைவில் பிரபலமடைவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்பதை காணலாம்.

1,10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் சூரிய கிரகத்தால் ஆளப்படுகிறார்கள். அதீத தன்னம்பிக்கை உடையவர். வழிநடத்தும் ஊக்கம் அளிக்கும் இவர்களின் இந்த திறனால் பலரால் போற்றப்படுவர். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் பிரகாசிக்க கூடிய திறனை உடையவர்கள்.
3,12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வியாழன் கிரகத்தால் ஆளப்படுவார்கள். சமூக அமைப்புகளில் செழித்து. ஊக்கமளிக்கும் திறனை கொண்டிருப்பதால் எளிதாக பிறரை கவர்ந்து இழுப்பார்கள். பிறருக்கு நல்ல அறிவுரைகளை மட்டுமே வழங்குவார்கள். தேவைப்படுபவர்களுக்கு உதவ தயங்கவே மாட்டார்கள்.

5,14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுவார்கள். மிகவும் புத்திசாலிகள். இவர்களது வார்த்தை பிறரை கவர்ந்திழுக்கும். எப்பேற்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் புத்திசாலித்தனத்தால் சமாளித்து எளிதில் வெளிவருவார்கள். மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டிருப்பார்கள்.