அதிர்ஷ்டத்தை வீட்டிற்கு கொண்டுவரும் அதிசய பூ... ஏற்காடில் பூத்த பிரம்ம கமல பூ

By Manchu Mar 24, 2026 06:00 PM GMT
Report

இந்தியாவில் ஏற்காட்டில் அதிசய மலரான பிரம்ம கமலம் பூ ஒருவரது இல்லத்தில் பூத்துக் குலுங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து வணங்கி செல்கின்றனர்.

பிரம்ம கமலம் பூ

ஏற்காட்டில் இளங்கோ என்பவர் வீட்டில் பிரம்ம கமல செடியினை பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் வளர்த்த செடியில் இரவு 9 மணியளவில் இரண்டு பிரம்ம கமல மொட்டுகள் மெல்ல விரிய தொடங்கியுள்ளது.

இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை முழுமைவதுமாக பூத்துக் குலுங்கிய இரண்டு மலர்களிலிருந்து வெளியான மணம் அந்த வீதி முழுவதும் தெய்வீக உணர்வினைக் கொடுத்துள்ளது.

கனவில் உறவினர்கள் அழுவது போல் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

கனவில் உறவினர்கள் அழுவது போல் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

குறித்த பூவானது இரவில் பூத்து அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பே சுருங்கி வாடிவிடும் தன்மை கொண்டுள்ளதாகும்.

அதிர்ஷ்டத்தை வீட்டிற்கு கொண்டுவரும் அதிசய பூ... ஏற்காடில் பூத்த பிரம்ம கமல பூ | Brahma Kamalam Flower That Bloomed In People Pooja

நபரின் வீட்டில் பூத்துள்ள பூ குறித்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் சென்ற நிலையில், நள்ளிரவு என்று கூட பார்க்காமல் மக்கள் வந்து புகைப்படம் எடுத்தும், நேரில் பூக்கலைப் பார்த்தும் ரசித்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மலரும் இந்த அதிசய மலர், ஏற்காட்டின் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையில் பூத்திருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ஷ்டத்தை வீட்டிற்கு கொண்டுவரும் அதிசய பூ... ஏற்காடில் பூத்த பிரம்ம கமல பூ | Brahma Kamalam Flower That Bloomed In People Pooja

சிவனுக்கு உகந்த மலராக கருதப்படும் இந்த பூ மலர்ந்துள்ளது அதிர்ஷ்டம் வீடு தேடி வருவதாகவும், செல்வம் மகிழ்ச்சி, வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகின்றது.

மேலும் இந்த பூக்கள் பூக்கும் இரவில் அதற்கு கற்பூரம் ஏற்றி சிறப்பு பூஜை செய்வதையும் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US