கனவில் உறவினர்கள் அழுவது போல் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
கனவு என்பது நம்முடைய ஆழ்மனதின் வெளிப்பாடு என்று சொல்வதுண்டு. ஆனால் சமயங்களில் நாம் கனவுகளில் காண்பதை நிஜ வாழ்க்கையில் நடப்பதையும் பார்க்கலாம். ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருப்பதாக சாஸ்திர ரீதியாக சொல்கிறார்கள். அப்படியாக நாம் சந்திக்கக்கூடிய கனவிற்கு என்ன பலன் என்று பார்ப்போம்.
இந்த உலகத்தில் கல் நெஞ்சம் ஆக இருப்பவர் கூட யாரேனும் கண்கலங்கி விட்டால் கரைவதுண்டு. அப்படியாக நம்முடைய கனவில் ஒருவர் அழுவது போல் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். பொதுவாகவே, நாம் சந்திக்கக்கூடிய கனவுகளுக்கு எதிர்மறையாக தான் நம் வாழ்க்கையில் நடக்கும் என்று சொல்வார்கள்.

அதே போல் தான் ஒருவர் நம்முடைய கனவில் அழுவது போல் வந்தால் அது உண்மையில் மகிழ்ச்சியின் அடையாளமாகவே இருக்கிறது. நம்முடைய துன்பங்கள் எல்லாம் கரைந்து போவதின் அறிகுறி என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய கனவுகளில் யாராவது அழுவது போல் வந்தால் நிச்சயம் மறுநாள் நம்முடைய மனமானது மிகவும் பதட்டமாகவே இருக்கும்.
ஏதேனும் சிக்கல் வந்துவிடுமோ? எதற்காக அவர்கள் நம்முடைய கனவில் வந்து அழுகிறார்கள் என்பது போல் நம்முடைய மனமானது அதையே சிந்தித்துக் கொண்டிருக்கும்.

அப்படியாக, நீங்கள் கனவில் படுக்கையில் அமர்ந்து அழுவது போல் வந்தால் வாழ்க்கையில் ஏதேனும் ஆபத்து வருவதின் அறிகுறிகையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், உங்களுடைய கனவில் நீங்கள் நெருங்கியவர்களிடம் சேர்ந்து அழுவது போல் கனவு கண்டால் நீங்கள் நீண்ட நாள் ஆசைப்பட்ட காரியம் ஒன்று நிறைவேற போவதின் அர்த்தமாக சொல்லப்படுகிறது. அதேபோல் கனவுகளில் உங்களுடைய கண்ணீரை நீங்களே துடைப்பது போல் வந்தால் மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் வெகு விரைவில் விடுபட போவதின் என்று அர்த்தமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |