புதனின் வக்ர நிவர்த்தி - 4 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கொட்டப்போகுது
புதனின் வக்ர நிவர்த்தியால் சில ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கப்போகிறது.
புதன் பகவான், மீன ராசியில் நீச நிலையில், வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 7ம் தேதி மாலை 4.04 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைந்து புதன் முன்னோக்கி நகர உள்ளார். இதனால் 4 ராசிகள் சாதகமான பலன்களை பெறவுள்ளனர்.
மிதுனம்
எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான வெற்றிகள் கிடைக்கும். வண்டி, வாகன பயன்பாட்டில் கவனம் தேவை. பாதுகாப்பாகச் செயல்படவும். பயணங்கள் அனுகூலம் தரும்.
சிம்மம்
சமூகத்தில் மதிப்பு, மரியாதை பெறலாம். வருமானம் சிறப்பாக இருந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். நிதி மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. குடும்பத்திலும், பணியிடத்திலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
துலாம்
எதிர்பாராத நேர்மறையான பலன்களும், நிதி ஆதாயங்களும் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு சார்ந்த விவகாரங்களில் நன்மை கிடைக்கும். தந்தை, மேலதிகாரிகளின் ஆதரவும், வழிகாட்டுதல் கிடைக்கும். தொழிலில் போட்டி குறையும்.
தனுசு
திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சார்ந்த வாழ்க்கையில் சிரமங்கள் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சொத்து சேர வாய்ப்புள்ளது. செல்வாக்குமிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும்.