புதன் ஏப்ரல் மாதத்தில் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டம் புகழ் என்று பலவகை கிடைக்கப்போகின்றது.

புதன் பெயர்ச்சி
ஜோதிடத்தின்படி அனைத்து கிரகங்களும் ஒவ்வொரு கால இடைவெளியில் தனது ராசியை மாற்றி கொள்ளும். இதன்போது ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் அவரவருக்குரிய பலன்கள் கிடைக்கப்படும்.
அந்த வகையில், ஏப்ரல் மாதத்தில் புதன் இரண்டு முறை பெயர்ச்சி அடைகிறார். ஜோதிடத்தில் புதன் அறிவு, தொடர்பு, வணிகத் திறன், சிந்தனை ஆகியவற்றுக்கு அதிபதியாக இருக்கிறார்.

புதனின் இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி அதிகாலை 1.20 மணிக்கு புதன் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஏப்ரல் 30ஆம் தேதி காலை அந்த ராசியிலே தான் இருப்பார்.
இந்த நாளில், காலை 6.55 மணிக்கு புதன் மீன ராசியில் இருந்து வெளியேறி, மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதை தான் இரட்டை பெயர்ச்சி என்று கூறுகிறார்கள். இதனால் நன்மை பெறப்போகும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

மிதுனம்
- புதனின் இரட்டை பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
- பல நாட்களாக உங்களுக்கு இருக்கும் பணப்பிரச்சனை முடிவிற்கு வரும்.
- உங்களுடைய செல்வம் பல மடங்கு அதிகரிக்கும்.
- தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் இருந்து வந்த சிறிய சிறிய பிரச்சனைகள் தீரும்.
- நிதி நிலையில் முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
- உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
- உங்கள் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
- குழந்தைகள் இல்லாமல் இருப்பவர்களுகக குழந்தைகள் தரிக்க வாய்ப்பு அதிகம்.
சிம்மம்
- புதனின் இரட்டை பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
- நீங்கள் இதுவரை நினைத்த காரியங்கள் எல்லாம் இந்த கால கட்டத்தில் நடக்கும்.
- இதுவரை முடிக்காமல் அப்படியே போடப்பட்ட பணிகள் அனைத்தும் முடிவடையும்.
- செல்வம் அதிகரித்து பல வழிகளில் உங்களுக்கு வருமானம் வரும்.
- ஊற்கனவே செய்த முதலீடு தற்போது லாபத்தை கொடுக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
- காதலில் இருப்பவர்கள் திருமணம் முடிக்க வாய்ப்பு உள்ளது.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் இரட்டை பெயர்ச்சி அதிகப்படியான லாபத்தை கொடுக்கும்.
- உங்களுடைய ்தனிப்பட்ட பிரச்சனை எல்லாம் தற்போது முடிவிற்கு வரும்.
- தொழில் விடயத்தில் நீங்கள் முன்னேறி செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.
- கூட்டுத் தொழிலில் இருந்து வந்த போட்டி, பொறாமை குறையும்.
- நண்பர்கள் குடும்பத்தினர் உங்களை வாழ்த்துவார்கள்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.
- வேலையில் சிறந்து விளங்குவீர்கள்.