புதனின் வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 6 ராசியினர்

By Yashini Apr 07, 2024 04:00 PM GMT
Report

புதன் பகவான் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.

புதன் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைப் போகிறார்.

புதன் வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் குறிப்பிட்ட 6 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

சுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பதன் காரணம்

சுமங்கலி பெண்கள் குங்குமம் வைப்பதன் காரணம்

ரிஷபம்

சுப பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ளலாம். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும் கிடைக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு ஏற்படலாம். நிதி நிலை மேம்படும். தடைப்பட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெறும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும்.

சிம்மம்

அற்புதமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவு அதிகமாகலாம். நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.

ஈசனே பார்வதி தேவிக்கு கூறிய விரதத்தின் மகிமை

ஈசனே பார்வதி தேவிக்கு கூறிய விரதத்தின் மகிமை

துலாம்

லாபகரமான பலன் கிடைக்கும். கடன் சுமை குறையும். உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும். இதுவரை இருந்த நோயில்இருந்து ஒருவழியாக குணமடைவீர்கள். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு

நல்ல பலன் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்களாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். புதிய பொறுப்புகள் கூடலாம். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்

நற்பலன்களை தரும். பண வரவு உண்டாகும். வீடு, வாகனம் யோகம் உண்டாகும். தொழிலை விரிவுப்படுத்தலாம். பொறுமையுடனும் முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.  

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US