ஈசனே பார்வதி தேவிக்கு கூறிய விரதத்தின் மகிமை
தேவர்களும், முனிவர்களும் இவ்விரதத்தை மேற்கொண்டு திருமாலின் அருளைப் பெற்றனர். இதன் மூலம் சகல சௌபாக்கியங்களோடு உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.
சிவபெருமானே பார்வதி தேவிக்கு இவ்விரதத்தின் மகிமையை கூறியது தான் இன்னும் சிறப்பு வாய்ந்தது.
சுக்ல பட்சத்தில் வரும் மற்றொரு ஏகதேசி, "மோட்ச ஏகாதசி" என்றும் அழைப்பார்கள்.
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் வைகுண்ட பதவி கிடைக்கும், மேலும் அன்று இயற்கை மரணமடைந்தவர்கள் வைகுண்டம் செல்வார்கள் என்பதும் நம்பிக்கை.
திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்படும், அதன் வழியாக சென்று திருமாலை வழிபட வேண்டும்.
இவ்விரதத்தன்று, காலையில் எழுந்து நீராடிவிட்டு, திருமால் கோவிலில் அல்லது வீட்டில் திருமாலின் படத்தின் முன், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும்.
ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும். அன்றைய தினம், பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது மிகவும் புண்ணியமாகும்.
இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் மகாவிஷ்ணு, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு வறுமை நீங்கிச் செல்வம் சேரும். மேலும் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.