விபரீத ஆசை கொண்ட குந்திதேவி? கண்ணன் மகிமை
இறைவனை சந்தோஷத்தில் காண்பதை விட நமக்கு ஏதாவது துன்பத்தில் தான் இறைவனை பரிபூர்ணமாக நம்மால் உணர முடியும்.
உதாரணமாக,தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான குருசேத்திரப் போர் முடிவுக்கு வந்து அதில் பலம் பொருந்திய பலர் பலியாகி விட்ட போதிலும், தர்மம் வெற்றி பெற்றதால் அனைவருக்கும் மகிழ்ச்சிஅடைந்தனர்.
பிறகு ,யுத்தம் முடிந்து யுதிஷ்டிரர் மன்னனாக முடிசூட்டப்பட்டு விட்டார். இதையடுத்து பாண்டவர்களுக்கு பக்கபலமாக நின்று போரிட்ட பலரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
எல்லா காரியங்களையும் தன் கண் அசைவிலேயே நடத்தி முடித்து விட்ட கண்ணனும் துவாரகைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
புறப்படும் சமயத்தில் அவர், தன்னுடைய அத்தை குந்தியை சந்தித்து ஆசிபெற்று விடைப்பெறுகிறேன் என்று சொல்லும் வேளையில் .
குந்திதேவி,வருத்தத்துடன் கண்ணா எங்கே போகிறாய் ?எங்களை விட்டு புறப்படும் நேரம் வந்துவிட்டதோ என்று பேசமுடியாமல் கண்ணனை பார்த்து கேட்க?
கண்ணனும், ஆம் எல்லோரும் ஒருநாள் விடை பெற்றாக வேண்டும் .இன்று இருப்பது நாளை இருப்பது இல்லை,நாளை வரப்போவது மறுநாள் இருப்பதில்லை .நிரந்தரமற்றது தான் வழக்கை என்று சொல்லி,தங்கள் வருத்தம் தேவையற்றது அத்தை என்று சொன்னார் கண்ணன்.
பிறகு தன் அத்தையிடம்,வேண்டுமானால் நான் உங்களுக்கு வரம் ஒன்று தருகிறேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்று கிருஷ்ணர் கேட்க ? அதற்கு குந்தி தேவி கேட்ட வரம் அதிர்ச்சி அளித்தது.
கண்ணா எனக்கு நீ துன்பத்தை வரம் கொடு என கேட்டார்? அதற்கு கண்ணன் என்ன அத்தை வித்யாசமாக விபரீதமாக கேட்கிறீர்கள் .எல்லோரும் இன்பம் தானே விரும்புவார்கள் என சொல்ல ,
குந்தி தேவி அதற்கு, கண்ணா!! சந்தோஷத்தில் உன்னை நான் எங்கு காண முடிகிறது. துன்பம் வரும் வேளையில் தான் கண்ணா என்னுடன் எப்பொழுதும் இருக்கிறாய்.
துன்பம் வந்தால் தானே அங்கு தர்மதிற்கு உன் சங்கும் சக்கரமும் வருகிறது.. அதர்மம் தோற்று தர்மம் ஜெயிப்பதில் தானே கண்ணா நீ இருக்கின்றாய்.
ஆதலால் உன்னை கண்டு ரசித்து வணங்கி கொண்டே இருக்க எனக்கு துன்பம் கொடு போதும் என்று கேட்டார் குந்தி தேவி.
உண்மையில் ,நம்மில் சிலர் சொல்வது உண்டு நொடி பொழுதில் தப்பித்தேன் என்றேன்.
அந்த நொடி பொழுதின் துன்பத்தில் தான் இறைவன் நம்முடன் வந்து போகின்றார் என்பதற்கு அது சாட்சி.
இன்பத்தை காட்டிலும் துன்பத்தில் மிகவும் வருந்தாமல் இறைவன் நம்முடன் இருப்பார் வந்து காப்பாற்றுவார் என்று நம்பிக்கை வைப்போம். அங்கு கண்டிப்பாக வந்து நிற்பார்.