ஜோதிடத்தை உடைத்தெரியக்கூடிய சக்தி யாருக்கு உண்டு?
பலரும் ஜோதிடம் என்பது கட்டயாம் அதன் விதிப்படி நடந்தே தீரும் என்று சொல்லுவார்கள். ஆனால், ஜோதிடத்தையும் உடைத்தெரியக்கூடிய சக்தி இந்த பிரபஞ்சத்திற்கு உண்டு. அது தான் இறை அருள். அந்த சக்தியை உணர்ந்ததால் தான் நம் முன்னோர்கள் நாம் அதை புரிந்து கொள்ளும் வகையில் பாடல்கள் வழியாக விளக்குகிறார்கள்.
மேலும், இதைத்தான் திருவள்ளுவரும் சொல்கிறார். "மெய்வருத்தக் கூலி தரும்" நம்முடைய கர்ம வினைகள் நீங்க, நம்மை வருத்தி எந்த ஒரு வேண்டுதலும், தீர்க்கமாக நமக்கு அந்த விஷயம் வேண்டும் என்று உழைத்து போராடினாலும் நிச்சயம் இந்த பிரபஞ்சம் நமக்கு அதை அருளிச்செய்யும் என்பது தான்.
அதனால், நம்முடைய இந்து மதத்தில் சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது போன்ற விஷயங்களில் நாம் ஈடுபாடு செலுத்துக்கின்றோம். அவ்வாறு செய்யும் பொழுது, நம்முடைய உடலும் மனமும் கட்டுப்பாட்டுக்குள் வந்து எப்பொழுதும் இறைசிந்தனையுடனே செயல்படுகிறது. அந்த வேளையில் நம்முடைய கடும் விரதம் கர்ம வினைகளுடன் போராடி நமக்கு வேண்டிய ஒரு விஷயத்தை கிடைக்கச்செய்கிறது.
இதைத்தான் கந்தபுராணமும் சொல்கிறது,
முதிர்தரு தவமுடை முனிவர் ஆயினும்
பொதுவறுதிருவோடு பொலிவர் ஆயினும்
வதியினர் ஆயினும் வலியவர் ஆயினும்
விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்.
அரிச்சந்திர புராணம் இவ்வாறு அதை கூறுகிறது,
கதிதரும் அயனும்மாலுங் கடக்கருங்கொடிய நீர்மை
விதியினை எளிய நம்மால் வெல்லலாந் தகைமைத் துண்டோ
அதிகம் வந்து எய்தா மேல்நாள் அமைந்தவே அடுக்கும் அல்லால்
மதிவலோய் இதற்கு வாடி வருந்தலை என்று சொன்னான்.
இதையே தேவாரம் இவ்வாறு முன்மொழிகிறது,
அல்லல் என்செயும் அருவினை என்செயும்
தொல்லை வல்வினை தொண்டன்றான் என் செய்யும்
தில்லை மாநகர்ச் சிற்றம்ப லவனார்க்கு
எல்லை இல்லாதோர் அடிமை பூண்டேனுக்கே.
அருணகிரி அந்தாதி இப்படி வலியுறுத்துகிறது,
பரமன் அருணைசம் பதம்பணிவார்க்கு என்றுங்
கருமஞ் சிதையும்எனக் கண்டோம் அருமந்த
கூட்டுத் தலை போய் கொடியதக்கன் வேள்வியிலே
ஆட்டுத் தலையாக லால்
ஔவையார் இவ்வாறு வேண்டுகிறார் ,
சிவாய நமவென்று சிந்தித்து இருப்பாருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை உபாயம் இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும்.
மேற்கண்ட பாடல்கள் எல்லாம் வெவ்வேறு வடிவத்தில் பலராலும் பாடப்பெற்று இருந்தாலும், அவை அனைத்தும் சொல்லும் பொருள் ஒன்று தான். தவத்தில் சிறந்தவனாக இருந்தாலும் சரி, வலிமை படைத்த உடலும் மனமும் கொண்டவனாக இருந்தாலும் சரி, எழுதிய விதியை யாராலும் கணிக்க முடியாது.
ஆனால், அதை மாற்றி அமைக்க ஒருவனால் மட்டுமே முடியும் அது தான் இறைவன் என்கிறார்கள். எப்பேர்ப்பட்ட கர்ம வினைகளும் இறை நாமம் சொல்லுவதால் கரைந்து ஓடுகிறது. வரலாற்று அதிசயங்கள் எல்லாம் நடக்கவே நடக்காது என்று கூறியவர்கள் முன் நடத்திக்காட்டியவர் தான் இறைவன். அவரை நம்பினால் ஜாதகம் கட்டமும் நமக்கு சாதகமாக மாறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |