சுமங்கலிப் பெண்கள் மொட்டை அடிக்கலாமா? சாஸ்திரம் சொல்வது என்ன?
பெண்கள் என்றாலே அழகு தான். மேலும், இந்து மதத்தில் பெண்களை கடவுளுக்கு இணையாக வைத்து மரியாதை செலுத்துகின்றோம். அதேபோல் வீடுகளில் எந்த ஒரு சுப காரியங்கள் செய்யவேண்டும் என்றாலும் பெண்களை முன்னிறுத்தி தான் செய்வோம்.
ஏன் நம்முடைய நாட்டில் ஓடும் நதிகளுக்கு கூட பெண்களின் பெயரை வைத்து தான் வழிபாடு செய்கின்றோம். அப்படியாக, பெண்கள் நிறைய வேண்டுதல்கள் வைப்பார்கள். ஆனாலும் அவ்வளவு எளிதாக பெண்கள் யாரும் தங்கள் முடியை மொட்டை அடித்து காணிக்கை கொடுப்பதாக வேண்டுவது இல்லை.
அப்படியாக பெண்கள் மொட்டை அடிக்கலாமா? மொட்டை அடிப்பதால் கிடைக்கும் நன்மை தீமைகள் என்னவென்று பார்ப்போம். ஒரு மனிதனுக்கு தலை முடி என்பது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதை யாரும் அவ்வளவு எளிதாக எடுக்க விருப்பமாட்டார்கள்.
அந்த வகையில் சுமங்கலி பெண்கள் மொட்டை அடித்து கொண்டு வழிபாடு செய்யலாமா? என்றால் கட்டாயம் அவர்கள் வேண்டுதல் வைத்து கொள்ளலாம். ஆனால் அவை குடும்பத்தில் கணவன் குழந்தைகள் யாருக்கும் பெரிய ஆபத்து நேர உள்ளது என்றால் அதில் இருந்து விடுபட அவர்கள் கட்டாயம் வேண்டுதல் வைத்து வழிபாடு செய்யலாம்.
அப்படி இல்லை என்றால் முடி காணிக்கை கொடுத்து வழிபாடு செய்யலாம். அடிக்கடி சுமங்கலி பெண்கள் மொட்டை அடித்து வேண்டுதல் வைப்பது வீட்டில் உள்ள ஐஸ்வர்யத்தையும், அதிர்ஷ்டத்தையும் தான் குறைக்கும் என்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







