ஆண்கள் நவராத்திரி விரதம் இருந்து வழிபாடு செய்யலாமா?
நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டினை போற்றி வழிபாடு செய்யக்கூடிய 9 நாள் தொடர்நிகழ்வாகும். பலரும் இந்த நவராத்திரி பண்டிகையின் பொழுது பெண்கள் தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் நினைக்கிறார்கள். அதோடு ஆண்கள் இந்த விரதம் கடைபிடிக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும்.
அப்படியாக நவராத்திரி விரதத்தை ஆண்கள் இருந்து வழிபாடு செய்யலாமா என்பதை பற்றி பார்ப்போம். இந்த 2025 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ஆம் தேதி அன்று தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது.
மேலும் நவராத்திரி முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாக வழிபட வேண்டும். நவராத்திரி என்பது சர்வமும் சக்தி மையம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கொலு படிக்கட்டுகள் அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அதோடு நவராத்திரியின் பொழுது கொலு அமைத்து வழிபாடு செய்தால் அம்பிகை நம் வீடுகளில் எழுந்தருளி அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.
மேலும் பெண்கள் நவராத்திரி பண்டிகையின் பொழுது மனதார அம்பிகையை நினைத்து வழிபாடு மேற்கொண்டால் அவர்களுக்கு மனதில் புத்துணர்ச்சியும், தைரியமும், வலிமையும் நேர்மறையான எண்ணங்களும் பிறக்கும். அவர்களுக்கு ஏதேனும் தோஷங்கள் இருந்தால் அவை அனைத்தும் விலகுகிறது.
நவராத்திரி விரதத்தை பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் கடைபிடிக்கலாம். ஆண்கள் கடைபிடிக்கும் பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினைகள் தீராத நோய்கள் போன்ற அனைத்தும் விலகி அம்மனின் அருள் கிடைக்கிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடுகின்ற நவராத்திரி சாரதா நவராத்திரி என்று சொல்லுவர்கள்.
சித்திரை புரட்டாசி மாதங்களில் வெயில் மழையினால் ஏற்படும் நோயிலிருந்து காப்பதற்காகவே சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும் புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆதலால் நவராத்திரி பண்டிகையின் பொழுது கட்டாயம் ஆண்களும் பெண்களும் இருவரும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







