உண்மையில் வாஸ்து குறைகளை சரி செய்ய முடியுமா?
ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வாஸ்து பார்த்து கட்டாத இடம் அவ்வளவு சிறப்பை தராது என்பது தான் நியதி. நாம் வசிக்கும் வீட்டில் தொடங்கி, தொழில் செய்யும் இடம் வரை வாஸ்து சரியாக பார்த்து அமைத்து கட்ட வேண்டும்.
அவ்வாறு கட்டினால் மட்டுமே நாம் அந்த இடத்தில் நிம்மதியாக வாழ முடியும். இல்லை என்றால் எதிர்பாராத துன்பங்களை நாம் சந்திக்க நேரிடும்.
ஒரு மனிதன் வாழ்வில் எவ்வாறு கிரகங்களுடைய மாற்றங்களும் தாக்குதல்களும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறதோ, வாஸ்துவும் ஒருவர் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான மாற்றங்களை கொண்டு வருகிறது.
அந்த வகையில் பலருக்கும் இந்த வாஸ்துவின் முக்கியத்துவம் புரிவதில்லை. மிகவும் சாதாரணமாக அவர்கள் எடுத்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் அந்த இடத்திற்கு குடியேறிய பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் கொண்டு தான் வாஸ்துவின் முக்கியத்துவம் புரிந்து அதற்கான தீர்வை தேடுகிறார்கள்.
அப்படியாக, கட்டிட ஒப்பந்ததாரராக இருந்தவர், அவர் தொழில் பல சிக்கலை சந்தித்த பிறகு வாஸ்துவின் முக்கியவதும் அறிந்து வாஸ்து ரிதியான பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று உணர்ந்து பலரின் வாஸ்து பிரச்சனைகளை தீர்த்து வருகிறார்.
அந்த வகையில் உண்மையில் வாஸ்துவால் சந்திக்கும் பிரச்சனைகளை சரி செய்ய முடியுமா? அதற்கு என்ன செய்யவேண்டும்? என்று பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் விநாயகம் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |