வீடுகளில் விளக்கேற்றும் பொழுது மறந்தும் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் கட்டாயமாக வீடுகளில் காலை மாலை நேரங்களில் விளக்கேற்றி பூஜை செய்வது வழக்கம். அதாவது நம் வீடுகளில் விளக்கேற்றி பூஜை செய்வது நமக்கு மன அமைதியும் குடும்பத்தில் ஒரு நல்ல செல்வ வளத்தையும் பெற்றுக் கொடுக்கும். அப்படியாக ஒரு சிலர் விளக்கேற்றும் பொழுது எண்ணெய் அல்லது நெய் தீபங்களில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்துக் கொள்வார்கள்.
இவ்வாறு சேர்க்கும் பொழுது அந்த தீபத்தில் சுடரானது நீண்ட நேரம் எரியும் என்ற ஒரு கணக்கில் அவர்கள் இவ்வாறு செய்வது உண்டு. ஆக நம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்யும் பொழுது அதில் கற்பூரம் சேர்க்கலாமா? கூடாதா? இவ்வாறு செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மை தீமைகள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.

கற்பூரம் என்பது காலம் காலமாக இந்து மதத்தில் பயன்படுத்தி வரக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். பலரும் இந்த கற்பூரத்தை மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் நம்முடைய இருள் மற்றும் எதிர்மறை ஆற்றலை போக்கக்கூடிய ஒரு அம்சமாக பார்க்கின்றனர். ஆதலால் தான் திருஷ்டி கழிப்பதற்கு கற்பூரம் முதன்மையாக பயன் படுத்தப்படுகிறது.
அந்த வகையில் வீடுகளில் விளக்கு ஏற்றும் பொழுது அதில் கற்பூரத்தை கலந்து ஏற்றுவது என்பது நமக்கு நல்ல நறுமணத்தையும் தீப சுடரானது இன்னும் பிரகாசமாக எரியக்கூடிய தன்மை கொடுக்கும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் விளக்கேற்றும் பொழுது அதில் கற்பூரம் கலந்து தான் ஏற்ற வேண்டும் என்பது அல்ல.
நாம் வெறும் எண்ணெய் மற்றும் நெய் கொண்டும் விளக்குகள் ஏற்றலாம். இந்த கற்பூரமானது ஆரத்தியின் பொழுது தான் தனியாக எரிக்கக்கூடியது. மேலும் கற்பூரம் என்பது வேகமாக எரியக்கூடிய தன்மை கொண்டது. நம் வீடுகளில் ஏற்றக்கூடிய தீபம் என்பது மெதுவாக சுடர்விட்டு எரிய வேண்டும். ஆக இவை இரண்டையும் கலந்து ஏற்றுவது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பமே ஆகும்.

ஆதலால், கற்பூரத்தை தனியாக ஏற்றுவதே நமக்கு மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும். அதோடு விளக்குகளில் நீங்கள் கற்பூரத்தை கலந்து ஏற்ற வேண்டும் என்ற எண்ணினால் சிறிய துண்டாக அதை கலந்து ஏற்றுவது நன்மை அளிக்கும்.
காரணம் கற்பூரமும் விளக்கு எரியக்கூடிய சுடரும் கலந்து மிகப்பெரிய அளவில் தீபம் எரிய ஆரம்பித்தால் சில விபத்துகளையும் அவை கொடுக்க நேரலாம். ஆக நாம் சற்று கவனமாக இதை கையாள்வதும் அவசியமாகும், இதைவிட எந்த விஷயங்கள் செய்வதாக இருந்தாலும் மிகவும் பாதுகாப்பாகவும் மன அமைதியுடனும் செய்வது அவசியமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |