விரதம் இருப்பவர்கள் உணவில் உப்பு சேர்க்கலாமா?
இறைவழிபாடு என்பது மனிதனுக்கு மனதிலும் வாழ்விலும் மிக பெரிய நம்பிக்கையை கொடுக்க கூடியது.அப்படியாக மனிதர்கள் நாம் பலரும் நம்முடைய வாழ்வில் நினைத்த காரியம் நிறைவேற இறைவனிடம் பல வேண்டுதல்கள் வைக்கின்றோம்.
சிலர் விரதம் இருந்து மாலை அணிந்து பாதை யாத்திரை செல்வார்கள் .சிலர் காவடி எடுத்தல்,பால் குடம் எடுத்தல்,மொட்டை அடித்தல் இதுவே குலதெய்வம் என்றால் பொங்கல் வைத்து படையல் வைப்பது என்று அவர்கள் ஏதேனும் தன்னிடம் உள்ளதை கொடுத்து ஒன்றை பெற பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள்.
இதில் பெரும்பாலான நபர்கள் கடைப்பிடிப்பது விரதம் தான்.அதாவது ஓருவர் விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் நடக்கிறது.உடலும் மனமும் வலிமை பெறுகிறது.அதோடு விரதம் மேற்கொள்ளும் பொழுது நாம் இடைவிடாது இறைவனை மனதில் நினைத்து கொண்டு இருப்போம்.
ஆக நம்முள் ஒரு அதீத தெய்விக ஆற்றலும் நேர்மறை சக்திகளும் பெருகும்.அப்பொழுது நாம் எந்த காரியம் செய்தாலும் வெற்றிகள் கிடைப்பதை பார்க்க முடியும். அதே போல் சிலருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது உணவில் உப்பு சேர்க்கலாமா?என்ற சந்தேகம் இருக்கும்.
அதாவது விரத தினங்களில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நடக்கவே நடக்காத என்று சொன்ன காரியங்கள் வெற்றி பெரும்.அதே போல் விரதம் நாட்களில் உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நம்முடைய தோஷம் எல்லாம் படிப்படியாக குறையும்.
அதிலும் குறிப்பாக கிரக நிலைகள் உங்களுக்கு சாதகம் இல்லாமல் செயல்படும் காலங்களில் இறைவனுக்கு விரதம் இருந்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கிரகங்களுடைய பாதிப்புகள் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |