கோயில்களுக்கு அருகில் வீடு கட்டலாமா?
பொதுவாக கோயில்கள் அருகில் வீடு இருக்கவேண்டும் என்று அனைவரும் ஆசை படுவது உண்டு.
அதாவது இறைவனின் அருட்பார்வையில் அவன் அருகிலேயே இருந்திட யாருக்கு தான் பிடிக்காது.அப்படியாக கோயில் அருகில் நாம் வீடு கட்டலாமா கூடாத என்று சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
அதாவது கோயில் அருகில் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அங்க குடி போக சில தயக்கம் வரும்.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக அந்த காலங்களில் பெரும்பாலும் வீடுகள் கோயில்களுக்கு அருகில் இருக்கும். அங்கு அந்த கோயிலில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் வசிப்பர்.
தற்போது கால போக்கில் அவை எல்லாம் மாறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காலங்களில் வீடு வாடகைக்கு, குத்தகைக்கு அல்லது கட்டுவதற்கு பார்க்கும் பொழுது கோயிலுக்கு அருகே இருக்கிறது என்றால் அதற்கு தனி மதிப்பு உண்டு.
அப்படியாக மக்களும் கோயிலுக்கு அருகே இருக்கிறது என்பதால் அந்த வீட்டிற்கு குடித்தனம் போக முன் வருவார்கள்.
மேலும் சாஸ்திர ரீதியாக வீடு கட்டும்பொழுது கோயில்களின் அருகில் வீடு கட்டினால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் சிவாலயங்கள் அருகில் வீடு கட்டினால் அந்த கோபுரத்தின் நிழல் வீடு மீது விழக்கூடாது.
அது மட்டுமல்ல விநாயகர் கோயிலுக்கு வலப்பக்கம் வீடு அமைப்பது நன்மை அல்ல என்கிறார்கள்.
சிவாலயத்திற்கு 100 அடி தூரம் கடந்தும் வைஷ்ணவ ஆலயத்திற்கு 20 அடி தூரம் கடந்தும் அம்மன் கோயிலுக்கு 120 ஆடி தூரம் கடந்தும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 10 அடி தூரம் கடந்தும் வீடுகள் கட்டினால் நன்மை உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |