திருமணம் ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள்.திருமணம் நிச்சயம் செய்யும் முன் ஜாதகம் பார்த்து நல்ல தேதி குறிப்பது அவசியம் ஆகும்.அதை விட திருமணம் செய்ய தமிழ் மாதங்களில் எந்த மாதம் செய்யலாம்?எந்த மாதம் செய்யக்கூடாது என்று சில வரைமுறைகளும் இருக்கிறது.
அப்படியாக பலருக்கும் இருக்கும் மிக பெரிய சந்தேகம் மாசி மாதம் திருமணம் செய்யலாமா?கூடாதா?என்பது தான்.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு.அதாவது "மாசி கயிறு பாசி படரும்"அதன் அர்த்தம் மாசி மாதத்தில் எவர் ஒருவர் திருமணம் அல்லது அவர்கள் தாலி கயிறு மாற்றுகிறார்களோ அவர்களுக்கு காலம் காலமாக அந்த பந்தம் தொடரும் என்பது தான்.மேலும்,மாசி மாதத்தை மாசி மகம் என்போம்.
இந்த மாதம் இறைவழிபாட்டிற்கு மிக உகந்த மாதம் ஆகும்.அதே போல் மாசி மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதும் சிறப்புக்குரிய விஷயம் தான்.மாசி மாதத்தில் புது வீடு குடிபெயரும் பொழுது அவர்கள் வீடுகளில் ஐஸ்வர்யம் பெருகும்.
அதே போல் குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் கருத்துவேறுபாடுகள் இருக்கிறது என்றால் பெண்கள் இந்த மாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறந்த பலனை பெறுவதோடு அவர்கள் தாலி பாக்கியம் பலம் பெரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |