சனி மகா திசை காலங்களில் திருமணம் செய்யலாமா?
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் திருமணத்தின் மீது ஒரு கனவு இருக்கும். அதாவது அவர்கள் திருமணம் அவர்கள் பிடித்த இடத்தில் நடக்க வேண்டும் என பல ஆசைகள் இருக்கும்.
ஆனால், அதையெல்லாம் விட சனி மகா திசை காலங்களில் திருமணம் செய்தால் அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? சனி மகா திசையில் திருமணம் செய்பவர்கள் எவ்வாறான கஷ்டங்களும் மகிழ்ச்சியும் பெறுவார்கள் என்றும் பார்ப்போம்.
ஒருவர் சனி மகா திசையில் திருமணம் செய்கிறார் என்றால் அது கட்டாயம் சனி பகவானால் நடத்தக்கூடிய ஒரு திருமணமாகும். காரணம் அவர்களுடைய கர்ம வினைகள் பல சோதனைகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து அந்த திருமணத்தை முதலில் நடத்தி வைக்கும்.
மிகுந்த குழப்பங்களில் தான் இந்த திருமண முதலில் நடைபெறும். மேலும் இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்கும்பொழுது அவர்களுக்கு இடையே அதிகமான பிரச்சனைகளும் அதிக சண்டைகள் வருவதை நாம் காணலாம்.
அதாவது சனி மகா திசை காலங்களில் திருமணம் செய்யும் தம்பதியினர் மிக வெளிச்சமாக ஒருவரின் குணங்களை தெரிந்து கொள்வார்கள். சமயங்களில் பிரிவும் கூட உண்டாகலாம். ஆனால் காலம் கடந்து இந்த உறவு யாராலும் எவராலும் பிரிக்க முடியாது ஒரு பந்தமாக மாறுகிறது.
அதாவது இவர்கள் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும், நம்முடைய திருமண வாழ்க்கையை எவ்வாறு நல்ல முறையில் கொண்டு போக வேண்டும் என்று அவர்கள் நிறைய பாடங்களை இந்த சனி மகா திசை காலங்களில் கற்றுக் கொள்வார்கள்.
முதலில் சனி பகவான் அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்து விடுவார்கள். அதாவது இரண்டு நபருமே அவர்கள் வாழ்க்கையில் பலரையும் கண்முடித்தனமாக நம்பிக்கொண்டிருந்திருப்பார்கள். அவ்வாறான போலி நபர்கள் திருமண வாழ்க்கையிலும் உடன் வரும் பொழுது அவர்கள் கட்டாயமாக திருமணத்தை மகிழ்ச்சியாக வாழ முடியாது. அதனால் முதலில் பாடம் கற்று கொடுத்து அவர்களுக்கு வாழ்க்கையை சனி பகவான் இனிமை ஆக்குவார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







