ஜாதகப்பொருத்தமில்லாமல் திருமணம் செய்யலாமா?
ஜோதிடம் எப்பொழுதும் நம் வாழ்க்கையுடன் மிகுந்த தொடர்புடையதாக கருதப்படுகிறது.அப்படியாக,பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதில் தொடங்கி,வீட்டில் திருமணம் விஷேசம் என்று எல்லா காரியங்களுக்கும் கட்டாயம் நாம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் மற்றும் நாள் குறித்து தான் செய்வோம்.
காரணம்,நம்முடைய கிரகங்களின் அமைப்பு,காலம் இவை எல்லாம் சரியான சூழ்நிலையில் இல்லை என்றால் ஏதேனும் பாதிப்புகளையும்,பிரச்சன்னைகளையும் கொடுத்து விடும்.அவ்வாறான சூழலில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள ஜோதிடம் பார்த்து செய்வது சிறந்த பலன்களை வழங்கும்.
அப்படியாக,நம்முடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.அதில் ஜாதக பொருத்தத்திற்கு நாம் அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்போம்.
அந்த வகையில் சில திருமணங்கள் பொருத்தம் பார்க்காமல் நடைபெறுவதையும் பார்க்க முடியும்.ஆனால்,அவர்களுக்கு திருமணம் ஆன சில நாட்களுக்கு பிறகு ஏதேனும் சவால்கள் சந்திக்கும் பொழுது தான் ஜாதகத்தில் இருக்கும் பிரச்சனைகள் கண்களுக்கு தெரியும்.
ஆக அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்து சந்தோஷமாக வாழ முடியுமா?அவ்வாறு வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும்?என்பதை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் டாக்டர் மஹாதன்ஷேகர் ராஜா.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |