புதனின் யோகத்தால் பிஸினஸில் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் யார்?
ஜோதிடத்தில் தன் கிரகம் மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதியாக திகழ்கிறார்.இந்த புதன் கிரகம் தான் ஒருவரின் வியாபாரம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், பங்குச் சந்தை மற்றும் கணிதத்தின் கடவுளாகவும் கருதப்படுகிறது. எனவே, புதனின் சஞ்சாரம் மாறும்போது, இந்த துறைகளில் சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பிப்ரவரி 21ஆம் தேதியான இன்று புதன் கிரகம் கும்ப ராசியில் பிரவேசிக்கிறது. இதனால் மூன்று ராசிகளுக்கு மிக சிறந்த பலன் காத்திருக்கிறது.அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் வாழ்க்கையில் நல்லதோர் மாற்றம் வழங்கும்.இவர்கள் சிந்தனை தெளிவடையும்.தொழில் வளர்ச்சிக்கான புது யோசனைகள் உருவாகும்.அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும்.தொழிலை விரிவு படுத்த நம்பி பணத்தை முதலீடுகள் செய்யலாம்.படிப்பில் சிக்கல்களை சந்தித்து வரும் மாணவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றம் வழங்கும்.இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் காரியத்தை தெளிவாக செய்து வெற்றி அடைவீர்கள். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கிடைக்கும்.
விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் உதயம் சுபமாக அமையும்.நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் வெற்றி பெரும்.இந்த காலகட்டத்தில், இவர்கள் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.எதிர்காலம் பற்றிய கவலைகள் படிப்படியாக குறையும்.நிதி துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |