மக்களின் பெரும் சந்தேகத்தை தீர்த்து வைத்த தாயுமானவர்
மனிதனாக பிறந்தால் அவனுக்கு பல்வேறு சந்தேகங்கள்,குழப்பங்கள் வருவதுண்டு.ஏன்,அந்த தேடல் தான் அவனுடைய பிறப்பின் ரகசியம் என்றே சொல்லலாம்.அவன் எதை தேடி செல்கின்றானோ அதை கட்டாயம் அடைந்து விடுவான்.
அப்படியாக ஒரு முறை இல்லறம் பெரிதா?துறவறம் பெரிதா?என்ற விவாதம் நடந்து கொண்டு இருந்தது.இதை கேட்டு கொண்டு இருந்த தாயுமான ஸ்வாமி"ஆட்டுபவன் இல்லாமல் பம்பரம் தானாக ஆடுமா?ஆடாது அல்லவா?அதே போல் தான் உலகத்தை ஆட்டுவிப்பவர் கடவுள்.
அப்படியாக,ஒரு மனிதன் இல்லறத்தில் ஈடுபட்டாலும் துறவறத்தில் ஈடுபட்டாலும்"நான்"என்ற ஆணவம் இல்லாமல் நடப்பவை எல்லாம் அவன் செயல் என்று எண்ணத்துடன் மனதை அடக்கி வாழ்ந்தால் இல்லறம் துறவறம் இரண்டும் அவனுக்கு சிறந்ததாக அமையும்.
இல்லையென்றால் இரண்டுமே தாழ்ந்தது என்று தீர்ப்பளித்தார்.இதை கேட்ட இரண்டு தரப்பினரும் மன மகிழ்ச்சியுடன் கிளம்பினர்.ஆக எந்த வாழ்க்கைக்கும் மன அமைதி தேவை.அப்பொழுது தான் எந்த செயலையும் சந்தோஷமாக செய்யமுடியும்.
அதோடு அந்த மனதை தான் கடவுளும் விரும்புகிறார்.ஆக மனிதனின் முக்கிய எதிரியான பெருமை,பொறாமை,போட்டி தவிர்த்து நம்முடைய கடமை செய்து வாழ நம்முடைய வாழ்க்கை இனிமையாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |