சிவன் கோவில்களில் திருமணம் செய்யலாமா?
திருமணம் என்பது ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வாகும். பலரும் திருமணங்களை இறைவன் சன்னதியில் வைத்து நடத்த விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக திருமணம் என்றால் முருகன் கோயில்களில் அதிகம் நடப்பதை நாம் காணலாம். சிலர் அவர்களுடைய குலதெய்வம் கோவில்களில் செய்வார்கள்.
ஆனால் சிவன் கோவில்களில் பலரும் திருமணம் செய்ய தயங்குகிறார்கள். அப்படியாக சிவன் கோவில்களில் ஒருவர் திருமணம் செய்யலாமா? இந்து மதத்தில் சிவபெருமான் ஆணவத்தையும் அங்காரத்தையும் கர்ம வினையையும் அடியோடு அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்த கடவுளாக இருக்கிறார்.
அவருடைய கோவில்களில் திருமணம் நடத்தினால் ஒருவருடைய வாழ்க்கை எவ்வாறு அமையும்? மேலும் சிவன் இருக்கும் இடமெல்லாம் சக்தி இருப்பாள், சக்தி இருக்கும் இடம் எல்லாம் சிவன் இருப்பார். சிவன் இல்லையே சக்தி இல்லை என்று ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்போம்.
தன்னுள் பாதியை தன்னுடைய துணைவியாருக்கு கொடுத்த கடவுள் சிவபெருமான். அப்படியாக சிவன் கோவில்களில் திருமணம் செய்தால் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று ஆன்மீகத்தை பற்றிய பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஆன்மிக பேச்சாளர் விஜயகுமார் அவர்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







