மறந்தும் இந்த விரலை கொண்டு மட்டும் விபூதி பூசாதீர்கள்
இந்து மதத்தில் விபூதி அல்லது திருநீறு இவை ஒரு முக்கியமான பொருளாக பார்க்கப்படுகிறது. விபூதி என்ற சொல்லிற்குமகிமை என்று ஒரு பொருள் உண்டு. எவர் ஒருவர் இறைவனின் திருநாமத்தை சொல்லி விபூதி பூசி கொள்கிறார்களோ அவர்களுக்கு பல நன்மைகள் நடக்கின்றது.
நெற்றியில் விபூதி வைத்துக் கொள்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும் இறைவன் பலத்தால் அவர்கள் அதைப் வெற்றி கொள்வார்கள். அதேபோல் தீய சக்திகள் எதிர்மறை ஆற்றல்கள் நம்மை சூழாமல் இந்த விபூதியானது நம்மை காப்பாற்றுகிறது.
இந்த விபூதி என்பது கல்பம், அணுகல்பம், உபகல்பம், அகல்பம் என நான்கு வகைகளாக சொல்லப்படுகிறது. அதோடு விபூதி சிவபெருமானுடைய ஒரு சின்னமாகவும் சைவ சமயத்தில் அவர்களுக்கு இது ஒரு முக்கிய வரப்பிரசாதமாகவும் பார்க்கப்படுகிறது.
சிவனை வழிபாடு செய்பவர்கள் நெற்றியில் கட்டாயம் விபூதியை காணலாம், மேலும் சிலருக்கு இந்த விபூதியை எவ்வாறு பூசிக்கொள்ள வேண்டும் என்று குழப்பம் இருக்கும். அப்படியாக விபூதியை எந்த விரல் கொண்டு பூச வேண்டும்? எந்த விரல் கொண்டு பூசினால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
1. கட்டை விரல்:
ஒருவருக்கு தீராத நோய் இருக்கிறது என்றால் அவர்கள் கட்டை விரல் கொண்டு மனதார இறைவனை நினைத்து பூசிக் கொண்டால் அதன் நோய் விலகும்.
2. ஆள்காட்டி விரல்:
நாம் ஆள்காட்டி விரல் கொண்டு பூசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் பொருள் இழப்புகள் வீண் செலவு போன்றவை உருவாகும்.
3. நடுவிரல்:
நடுவிரல் கொண்டு விபூதி பூசும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை இழக்க நேர்கிறது.
4. மோதிர விரல்:
மோதிர விரலால் வழிபாடு செய்து விபூதி பூசிக்கொள்ளும் பொழுது வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
5. மோதிர விரல், கட்டை விரல்:
இரண்டு விரல் கொண்டு விபூதி பூசும்பொழுது இந்த உலகத்தில் நாம் எதையும் சாதிக்கலாம். மேலும் விபூதியை பலரும் உடம்பில் பல இடங்களில் பூசி கொள்வார்கள்.
அப்படியாக விபூதியை இருபுருவங்களுக்கு நடுவிலும், மார்பு, கைகள், தோள்கள், போன்ற இடங்களில் பூசிக் கொள்ளலாம் மார்பு பகுதிக்கு கீழே நாம் விபூதி பூசுவதை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







